உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் உள்துறை அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்துறை அமைச்சர்
Minister of Home Affairs
தற்போது
அமித் ஷா

30 மே 2019 முதல்
உள்துறை அமைச்சகம்
சுருக்கம்HM
உறுப்பினர்மத்திய அமைச்சரவை
அறிக்கைகள்பிரதமர்,
இந்திய நாடாளுமன்றம்
அலுவலகம்வடக்கு தொகுதி, குடியரசுத் தலைவர் இல்லம், புது தில்லி
நியமிப்பவர்குடியரசுத் தலைவர் (ஆலோசனையின் பேரில் பிரதமர்)
பதவிக் காலம்5 வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சர்தார் வல்லப்பாய் படேல்
உருவாக்கம்15 ஆகத்து 1947
இணையதளம்mha.gov.in

உள்துறை அமைச்சர் -(உள்விவகார அமைச்சர்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் அமைச்சராவார். பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும். மாநில அளவிலும் இவ்வமைச்சகங்கள் பொறுப்பு வாயந்தனவாக கருதப்படுகின்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு இவ்வமைச்சகங்களே பொறுப்பு ஏற்கின்றன.

அமைச்சர்கள்

[தொகு]

இதுவரை இந்தியாவின் உள்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் பட்டியல்

பெயர் புகைப்படம் பொறுப்பு வகித்த வருடம் கட்சி
(கூட்டணி)
பிரதமர்கள்
1 சர்தார் வல்லப்பாய் படேல் 15 ஆகத்து 1947 12 திசம்பர் 1950 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 ஜவகர்லால் நேரு 12 திசம்பர் 1950 26 திசம்பர் 1950
3 சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி 26 திசம்பர் 1950 5 November 1951
4 கைலாசு நாத் கட்சு
5 நவம்பர் 1951 10 சனவரி 1955
5 கோவிந்த் வல்லப் பந்த் 10 சனவரி 1955 25 பெப்ரவரி 1961
6 லால் பகதூர் சாஸ்திரி 25 பெப்ரவரி 1961 1 செப்டம்பர் 1963
7 குல்சாரிலால் நந்தா 1 செப்டம்பர் 1963 9 நவம்பர் 1966 ஜவகர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
8 இந்திரா காந்தி 9 நவம்பர் 1966 13 நவம்பர் 1966 இந்திரா காந்தி
9 ஒய். பி. சவாண் 13 நவம்பர் 1966 27 June 1970
(8) இந்திரா காந்தி 27 சூன் 1970 5 பெப்ரவரி 1973
10 உமா சங்கர் தீட்சித் 5 பெப்ரவரி 1973 10 அக்டோபர் 1974
11 காசு பிரம்மானந்த ரெட்டி 10 அக்டோபர் 1974 24 மார்ச் 1977
12 சரண் சிங் 24 மார்ச் 1977 1 சூலை 1978 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
13 மொரார்ஜி தேசாய் 1 சூலை 1978 24 சனவரி 1979
14 கிருபாய் எம். படேல் 24 சனவரி 1979 28 சூலை 1979
(9) ஒய். பி. சவாண் 28 சூலை 1979 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
15 ஜெயில் சிங் 14 சனவரி 1980 22 சூன் 1982 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
16 ரா. வெங்கட்ராமன் 22 சூன் 1982 2 செப்டம்பர் 1982
17 பிரகாஷ் சந்திர சேத்தி 2 செப்டம்பர் 1982 19 சூலை 1984
18 பி. வி. நரசிம்ம ராவ் 19 சூலை 1984 31 திசம்பர் 1984 இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
19 எசு. பி. சவாண் 31 திசம்பர் 1984 12 மார்ச் 1986 ராஜீவ் காந்தி
(18) பி. வி. நரசிம்ம ராவ் 12 மார்ச் 1986 12 மே 1986
20 பூட்டா சிங் 12 மே 1986 2 திசம்பர் 1989
21 முப்தி முகமது சயீத் 2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
வி. பி. சிங்
22 சந்திரசேகர் 10 நவம்பர் 1990 21 சூன் 1991 சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
(தேசிய முன்னணி)
சந்திரசேகர்
(19) எசு. பி. சவாண் 21 சூன் 1991 16 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
23 முரளி மனோகர் ஜோஷி 16 மே 1996 1 சூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
25 தேவ கௌடா 1 சூன் 1996 29 சூன் 1996 ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
தேவ கௌடா
25 இந்திரஜித் குப்தா 29 சூன் 1996 19 மார்ச் 1998 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
(ஐக்கிய முன்னணி)
தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
26 லால் கிருஷ்ண அத்வானி 19 மார்ச் 1998 22 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்
27 சிவ்ராஜ் பாட்டீல் 22 மே 2004 30 நவம்பர் 2008 இந்திய தேசிய காங்கிரசு
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி)
மன்மோகன் சிங்
28 ப. சிதம்பரம் 30 நவம்பர் 2008 31 ஜூலை 2012
29 சுசில்குமார் சிண்டே 31 சூலை 2012 26 மே 2014
30 ராஜ்நாத் சிங் 26 மே 2014 30 மே 2019 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
நரேந்திர மோதி
31 அமித் ஷா 30 மே 2019 பதவியில்

பணி

[தொகு]

உள்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாவன;

  • மாநில மற்றும் மத்திய அரசின் உள்நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கவனித்தல்.
  • அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தல்.
  • நாட்டின் அனைத்து சட்ட ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்தல்.
  • அனைத்து குடியுரிமை மற்றும் இயற்கை பண்புகளை கொண்ட மக்கள்தொகை கணக்கெடுத்தல், தேசிய கீதம், தேசியக் கொடி, மொழிகள் இவைகளை காத்தல்.
  • அரசியலமைப்பின் படி இதன் அடிப்படை செயல்பாடுகளான குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மற்றும் ஏனைய அமைச்சர்களின் சுற்றறிக்கைகள், நியமனங்கள், பொறுப்பு விலகல்கள் அல்லது விலக்கல்கள், ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் நியமனம் மற்றும் விலக்கல்கள் போன்ற செயல்பாடுகள் இத்துறை அமைச்சரால் அல்லது அமைச்சகத்தால் கவனிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]