கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர்களை ஆணைய அதிகாரிகள் (Commissioned Officer), இளைய ஆணைய அதிகாரிகள் (Junior Commissioned Officer) மற்றும் பிற தர வரிசையினர் என மூன்றாகப் பிரிப்பவர். இத்தர வரிசை மற்றும் பதவிச் சின்னங்கள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்திலிருந்து சில மாற்றங்களுடன் தொடர்கிறது.
இராணுவப் பயிற்சி பெறும் அதிகாரிகளை அதிகாரி மாணவர்கள் என்று அழைப்பர். அவர்களுக்கு அதிகாரிகளுக்கான சீருடை மட்டும் வழங்கப்படும். பதவி மற்றும் பதவிச் சின்னம் வழங்கப்படாது. இராணுவப் பயிற்சி முடித்து குறிப்பிட்ட ரெஜிமெண்டுகளில் சேர்ந்த அதிகாரிகளுக்கு உரிய நிறங்களில் சீருடை வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் தங்கள் பெயருடன், வகித்த பதவிப் பெயரை எவ்வாறு இட்டுக்கொள்வது என இந்திய இராணுவத்தின் 21 சூலை 2014 நாளின் சுற்றறிக்கையில் குறித்துள்ளது. எடுத்துக்காட்டாக ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி தனது பெயருக்கு முன்னாள் பிரிகேடியர் xxxxx (பணி ஓய்வு) என இட்டுக்கொள்ள வேண்டும்.[5]எடுத்துக்காட்டு பிரிகேடியர் சந்த் சிங் (பணி ஓய்வு) என இட்டுக் கொள்ள வேண்டும். இதன் பொருள் இராணுவப் பதவி ஒரு போதும் ஓய்வு பெறுவதில்லை; ஓய்வு பெறுவது இராணுவ அதிகாரி மட்டுமே.[5]பணி ஓய்வு பெற்று இறந்த இராணுவ அதிகாரிகளுக்கும் இந்நடைமுறை பொருந்தும்.[5]