இரவில் விந்து வெளியேறுதல்
இரவில் விந்து வெளியேறுதல் என்பது பருவ வயதை எட்டிய பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரவில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். இரவில் உறங்கும் போது, ஏற்படும் பருவ வயது கனவுகளால் ஆண்களுக்கு விந்து வெளியேறுதலும், பெண்களுக்கு பெண்ணுறுப்பு ஈரமாதலும் நடைபெறுகிறது.[1]
நிகழ்வெண்
[தொகு]ஆண்களுக்கு
[தொகு]இவ்வாறு விந்து வெளியேறுதல் பெரும்பாலான வயதுக்கு வந்த ஆண்கள் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சுமார் 84% சதவிகிதமான ஆண்கள் இந்நிலையை தங்களுடைய வாழ்வில் ஒரு முறையேனும் சந்தித்துள்ளனர்.[2] 15 வயது நிரம்பிய ஆண்களுக்கு சுமார் ஒரு வாரத்திற்கு 0.36 முறையும் (அதாவது மூன்று வாரத்திற்கு ஒரு முறையும்). 40 வயது வரை உடைய திருமணமாகாத ஆண்களுக்கு வாரத்திற்கு 0.18 முறையும் (அதாவது ஐந்தரை வாரத்திற்கு ஒரு முறையும் திருமணமானவர்களுக்கு வாரத்திற்கு 0.23 முறையும் (மாதமொருமுறையும்), 19 வயதான திருமணமான ஆண்களுக்கு வாரத்திற்கு 0.15 முறையும் (இரு மாதத்திற்கு ஒரு முறையும்) இந்நிகழ்வு நடைபெறுகிறது,[3] உலகில் பெரும்பாலான பகுதிகளில் 97% ஆண்கள் தங்களுடைய 24 வயதுக்குள் ஒரு முறையாவது இந்நிகழ்விற்கு ஆளாகின்றனர்.[4] இந்நிகழ்வைக் குறித்து கவலையோ, தயக்கமோ, பயப்படவோ கொள்ளத்தேவையில்லை. இது ஒரு இயல்பான இயற்கை நிகழ்வாகும்.
பெண்களுக்கு
[தொகு]1953-ம் ஆண்டு ஆல்ப்ரெட் கின்சீ என்பவர் நடத்திய ஆராய்ச்சியில், 40% சதவித பெண்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இரவில் தங்களுடைய உறுப்பு ஈரமாதல் நிகழ்வை அடைந்ததாக தெரியவந்தது. இந்நிகழ்வு நடைபெறாத பெண்களுக்கும் எவ்விதமான குறைபாடும் இல்லை. பெரும்பாலும் பதின்மூன்று முதல் இருபத்தி ஒன்று வயதிற்குள் இந்நிகழ்வு நடக்க அதிக வாய்ப்புள்ளது.[5]
தவறான நம்பிக்கைகள்
[தொகு]சில தவறான விளம்பரங்களாலும், சில வியாபாரிகள் தங்களுடைய பொருளுக்கு மதிப்பு கூட்டுவதற்காகவும், அண்மைக் காலங்களில் இந்நிகழ்வு தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய கலாச்சாரத்தினைக் காரணமாகவும், அறியாமையை அடிப்படையாகவும் கொண்டு இவர்கள் செயல்படுகிறார்கள்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Do women have wet dreams, too?". Go Ask Alice. Columbia University. Archived from the original on 20 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kinsey, Alfred C. Sexual Behavior in the Human Male, p. 519
- ↑ Kinsey, Alfred C. Sexual Behavior in the Human Male, p. 275
- ↑ "Knowledge about Human Reproduction and Experience of Puberty" (PDF). Indonesia Young Adult Reproductive Health Survey 2002–2003. Badan Pusat Statistik (BPS-Statistics Indonesia), Jakarta, Indonesia; National Family Planning Coordinating Board, Jakarta, Indonesia; Ministry of Health, Jakarta, Indonesia, ORC Macro, Calverton, Maryland USA. p. 27. பார்க்கப்பட்ட நாள் April 7, 2011.
- ↑ "Nocturnal Orgasm...or...Female wet dream?". Newsvine. 2009. பார்க்கப்பட்ட நாள் 29 July 2012.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற - சில உண்மைகள்! பரணிடப்பட்டது 2016-11-22 at the வந்தவழி இயந்திரம்