இருசிகேசு முகர்ச்சி
இருசிகேசு முகர்ச்சி | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்காலத்தில், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா) | 30 செப்டம்பர் 1922
இறப்பு | 27 ஆகத்து 2006 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 83)
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
இருசிகேசு முகர்ச்சி (Hrishikesh Mukherjee, கிரந்த ஒலிப்பு:ரிஷிகேஷ் முகர்ஜி) (30 செப்டம்பர் 1922 – 27 ஆகத்து 2006) புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன.
இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.[1][2][3][4]
He also remained the chairman of the இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார்.[5] 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Encyclopaedia Britannica (India) Pvt Ltd. p. 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-066-0.
- ↑ The common man lure of Hrishikesh Mukherjee's films ரெடிப்.காம்.
- ↑ Hrishikesh Mukherjee's best films Special Photo feature, ரெடிப்.காம், 28 August 2006.
- ↑ Duara, Ajit (3 September 2006). "A touch of realism". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161843/http://www.hindu.com/mag/2006/09/03/stories/2006090300310500.htm. பார்த்த நாள்: 19 September 2011.
- ↑ Remembering Hrishikesh Mukherjee பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ், 26 August 2008