உயிர்த்தெழும் செடி
உயிர்த்தெழும் செடி | |
---|---|
Anastatica hierochuntica | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Anastatica |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AnastaticaA. hierochuntica
|
இருசொற் பெயரீடு | |
Anastatica hierochuntica L. |
புத்துயிர்ப்புச் செடி (Anastatica hierochuntina) அல்லது ஜெரிக்கோ உரோசுச் செடி ஒரு பருவச் செடி ஆகும்.[1][2][3] இது நீரால் விரிந்து குறுகக் கூடியது. என்றாலும், இது உண்மையான புத்துயிர்ப்புத் தாவரமன்று.[2] ஏனெனில், இதன் மடிந்த இழைமங்கள் துளிர்த்து பசுமை அடைவதில்லை.
வகைப்பாடு
[தொகு]தாவரவியல் பெயர் : அனஸ்டாட்டிக்கா கைரோசன்டினா (Anastatica hierochuntina)
குடும்பம் : குருசிபெரே (Cruciferae)
வேறு பெயர் : ஜெரிக்கோ உரோசு (Rose of Jericho)
பெயர்கள்
[தொகு]பொதுவாக, இது மரியம் மலர், தூயமேரி மலர், மேரி மல்லர், வெண்கடுகு மலர், ஜெரிக்கோ உரோசு எனப்படுகிறது.[2]
சிறப்பு பண்புகள்
[தொகு]இது ஒருபருவச் செடி, 12 செ.மீ. உயரம் வளரும். வெள்ளை நிற சிறிய பூக்கள் விரைவில் வந்தவுடன் இலைகள் உதிரந்துவிடும். இதன் பிறகு இதனுடைய கிளைகள் சுருண்டு பந்து போன்று உருண்டையாகி கூடைபோல் தோன்றும். இதைச் சுற்றியுள்ள கிளைகள் பாதுகாக்கின்றன. பாலைவனக் காற்றின் மூலம் இதன் வேர்கள் பிடுங்கப்பட்டால் இது உருண்டுகொண்டே செல்லும். இந்த பந்துபோன்ற அமைப்பு பார்ப்பதற்கு வெடிக்காத ரோஜா பூ போல் உள்ளது. மழை வந்தவுடன் இதன் கிளைகள் திரும்பவும் திறக்கின்றன. இதனால் இதன் உள்ளே உள்ள கனி வெடித்து விதைகள் வெளியே வருகின்றன. விதைகள் கிளையின் உள்ளேயே முளைக்கின்றன. இச்செடி இறப்பதில்லை. மீண்டும் உயிர் பெற்று விடுகிறது. இதில் ஒரே ஒரு இனம் மட்டும் உள்ளது.
காணப்படும் பகுதிகள்
[தொகு]இச்செடி அரேபியா, சிரியா, பாலத்தீனம், மற்றும் அல்ஜீரியா பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.
காட்சி மேடை
[தொகு]-
மலர்கள்
-
உலர்ந்தது
-
நீரில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ William Francis Ganong (1921). A Textbook of botany for colleges. MacMillan Co. p. 604. page 359
- ↑ 2.0 2.1 2.2 James A. Duke; Peggy-Ann K. Duke; Judith L. duCellie (2007). Duke's Handbook of Medicinal Plants of the Bible. CRC Press. p. 552. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8202-4. pages 36-37
- ↑ G. E. Wickens (1998). Ecophysiology of Economic Plants in Arid and Semi-arid Lands. Springer. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-52171-2. pages 204-205