எட்டா ஜேம்சு
எட்டா ஜேம்சு | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜேம்செட்டா ஹாக்கின்சு |
பிற பெயர்கள் | மிஸ் பீச்சஸ், ஆர்&பியின் பெண்ணரசி |
பிறப்பு | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | சனவரி 25, 1938
இறப்பு | சனவரி 20, 2012 ரிவர்சைட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா. | (அகவை 73)
இசை வடிவங்கள் | புளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள் |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிட்டார் |
இசைத்துறையில் | 1954–2012 |
வெளியீட்டு நிறுவனங்கள் | மாடர்ன், செஸ்/எம்சிஏ, ஆர்கோ, கிரௌன், கேடட், ஐலண்ட்/பாலிகிராம், பிரைவேட் மியூசிக்/ஆர்சிஏ, எலெக்ட்ரா, விர்ஜின்/ஈஎம்ஐ, வெர்வ் போர்காஸ்ட்/யூனிவெர்சல் ரிகார்ட்ஸ் |
இணைந்த செயற்பாடுகள் | ஆர்வி புகுவா, ஜானி ஓடிசு, சுகர் பை டெசான்டோ |
எட்டா சேம்சு ; பிறப்பு: சமசெட்டா ஆக்கின்சு; சனவரி 25, 1938 – சனவரி 20, 2012) ஓர் அமெரிக்க பாடகி ஆவார். புளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள் எனப் பல்வித வகைப்பாடல்களையும் பாடியுள்ளார். 1950களின் இடையில் தமது பாட்டுத்தொழிலை துவக்கினார். டான்ஸ் வித் மீ ஹென்றி, அட் லாஸ்ட், டெல் மாமா மற்றும் ஐ வுட் ராதர் கோ பிளைன்ட் போன்ற பாடல்கள் மூலம் புகழ்பெற்றார். அவரே பாடல்வரிகளை எழுதியதாகவும் கூறிவந்தார்.[1] போதை மருந்துப் பழக்கம் போன்ற பல தனிப்பட்ட சிக்கல்களில் துன்புற்று 1980களில் தனது இசைத் தொகுப்பு செவன் இயர்ஸ் இட்ச் மூலம் மீண்டு வந்தார்.[2]
இவர் ராக் அண்டு ரோல் மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் வகைப்பாடல்களுக்கிடையே பாலமாக கருதப்படுகிறார். ஆறு கிராமி விருதுகளையும் 17 புளூஸ் மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளார். ராக் அண்ட் ரோல் பெருமைமிக்கவர் முற்றத்தில் 1993ஆம் ஆண்டிலும் புளூஸ் பெருமைமிக்கவர் முற்றத்தில் 2001இலும் கிராமி பெருமைமிக்கவர் முற்றத்தில் 1999 மற்றும் 2008இலும் இடம் பெற்றார். [3] ரோலிங் இசுடோன்சு இவரை எக்காலத்திலும் சிறந்த 100 பெரும் பாடகர்களின் தரவரிசையில் 22வதாகவும் 100 பெரும் கலைஞர்களில் 62ஆகவும் மதிப்பிட்டது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Etta James, David Ritz. Rage to survive: the Etta James story. Da Capo Press, 2003. p. 173. Archived from the original on அக்டோபர் 9, 2013. பார்க்கப்பட்ட நாள் May 21, 2011.
- ↑ Liz Sonneborn (2002). A to Z of American women in the performing arts. Infobase Publishing. p. 116. பார்க்கப்பட்ட நாள் May 22, 2011.
- ↑ Down Beat Magazine July 27, 2007 Etta James Hospitalized, Tour Suspended பரணிடப்பட்டது 2009-01-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "100 Greatest Singers of All Time". Rolling Stone. http://www.rollingstone.com/music/lists/100-greatest-singers-of-all-time-19691231/etta-james-19691231. பார்த்த நாள்: 2008-11-11.
- ↑ "100 Greatest Singers of All Time". Rolling Stone. http://www.rollingstone.com/music/lists/100-greatest-artists-of-all-time-19691231/etta-james-19691231. பார்த்த நாள்: 2008-11-11.
மேலும் அறிய
[தொகு]- Rage To Survive: The Etta James Story by Etta James and David Ritz. Da Capo Press, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-3068-1262-2.
- Icons of R&B and Soul, Volume 1 by Bob Gulla. Greenwood Press, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-3133-4044-7.
வெளியிணைப்புகள்
[தொகு]- Etta James bio
- Best Etta James album பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்
- Best Etta James song பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்
- Etta James, blues icon, dies aged 73