உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
நிறுவப்பட்டது1945
வகைமுதன்மை அங்கம்
சட்டப்படி நிலைசெயற்பாட்டிலில்லை(As of 1994)
இணையதளம்http://www.un.org/en/mainbodies/trusteeship
உலகம் 1945 ஆண்டில், ஐநா பொறுப்பில் இருந்த பகுதிகள் பச்சை வண்ணத்தில்
உலகம் 2000 ஆண்டில், எந்தப் பகுதியும் ஐநா பொறுப்பில் இல்லை

ஐக்கிய நாடுகள் முறைமையின் ஐந்து அங்கங்களில் ஒன்றானஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் (United Nations Trusteeship Council) ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடு/பகுதிகளை பன்னாட்டு அமைதி மற்றும் பாதுக்காப்பினையும் அப்பகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டும் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டது. பொறுப்பாட்சிப் பகுதிகள் பெரும்பாலன முன்னாள் உலக நாடுகள் சங்கப் பொறுப்பில் இருந்தவை அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில தற்போது விடுதலை பெற்றன அல்லது தன்னாட்சி அடைந்து விட்டன; சில அடுத்துள்ள நாடுகளுடன் இணைந்து கொண்டன. கடைசியாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஐநா பொறுப்பாட்சியில் இருந்த பலாவு தன்னாட்சி பெற்று 1994ஆம் ஆண்டு ஐநாவின் உறுப்பினர் நாடாக இணைந்தது.

வெளியிணைப்புகள்

[தொகு]