ஐ-போன் 4எஸ்
ஐ-போன் 4s | |
முழக்கம் | "ஐபோன்களில் மிகவும் வியக்கத்தக்கது இதுவே."[1] |
---|---|
தயாரிப்பாளர் | ஃபாக்ஸ்கொன் |
இயங்கு தளம் | iOS 5.1 வெளியீடு மார்ச்சு 7 2012 |
உள்ளீடு | 4 buttons switch microphones, touch-screen, acceleration, orientation |
CPU | 800 MHz dual-core Apple A5[2] |
நினைவகம் | 512 MB[3] |
பதிவகம் | 16, 32, or 64 GB |
தொடர்பாற்றல் | ஒய்-ஃபை (802.11 b/g/n) (2.4 GHz only) புளூடூத்.0 Combined GSM/CDMA antenna: quad-band உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/GPRS/EDGE (800 850 900 1800 1900 MHz) Quad-band UMTS/HSDPA/HSUPA (800 850 900 1900 2100 MHz) (800 MHz unannounced) Dual-band CDMA/EV-DO Rev. A (800 1900 MHz) குளொனொஸ், GPS |
எடை | 140 g (4.9 oz) |
வடிவம் | Slate நுண்ணறி பேசி |
முந்தையது | iPhone 4 |
தொடர்புள்ளவை | ஐ-போன், iPad 2, iPod Touch |
ஐ-போன் 4எஸ் (iPhone 4S) ஆப்பிள் நிறுவனத்தின் என்பது இணையத் தொடர்பு உள்ள பல்லூடக வசதி கொண்ட நுண்ணறி பேசி. இந்த நகர்பேசி நவீன ரெடினா தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.
செயற்கூறுகள்
[தொகு]சிரீ
[தொகு]சிரீ என்பது ஒலிவடிவில் இடும் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் ஒரு புதிய தொழில் நுட்பம் ஆகும். இயல்பாகப் பேசும் மொழியில் பேசினாலே புரிந்துகொண்டு இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஒலிவடிவக் கேள்வி/ஆணைகள் எல்லா மொழிகளிலும் இப்பொழுது இயலுவதில்லை. சிரீ என்பது Siri என்று ஆங்கிலத்தில் முதலெழுத்துகளால் ஆன அஃகுப்பெயர் ( சுருக்கப்பெயர்). இந்த "Siri "என்பது, பேச்சைப் பகுத்துப் புரிந்துகொண்டு இயங்கும் இடைமுகம் என்று பொருள்படும் "Speech Interpretation and Recognition Interface" என்பதன் சுருக்கம் (அஃகம்).
அசைவுணர் மானி
[தொகு]இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து கிடையாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.
ஒளி உணரி
[தொகு]வெளிச்சம் குறைவான இடத்தில் ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றாற் போல திரை மாறிவிடும்.
தூர உணரி
[தொகு]ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக அணைந்துவிடும்; இது மின்னாற்றலை சேமிக்க உதவும் விதமாக அமைந்துள்ளது.
இதர அம்சங்கள்
[தொகு]- உச்சரிப்பின் மூலமாக அழைப்பை ஏற்படுத்த முடியும்
- உச்சரிப்பின் மூலமாக வானிலை, குறுந்தகவல் அனுப்ப முடியும்
- இது 3.5G திறன் கொண்ட நகர் பேசி
- 8 மெகாபிக்சல் கொண்ட படம்பிடி கருவி
- அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன் 14.4 Mbps on a HSPA+
- நவீன ரெடினா திரை மூலமாக நிகழ்படங்களை தெளிவாக காணும் வசதி
- விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
- Pdf, Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
- விமானம் ஏறியதும் கம்பியற்ற வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
- கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
- புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
குறைகள்
[தொகு]- ஆப்பிள் நிறுவன மென்பொருள் அல்லாத மற்ற மென்பொருட்களை ஏற்றி பயன்படுத்த இயலாது.
- யுஎசுபி எளிதாக கணினியில் இணைக்க முடியாது
- பிற பெரும்பாலான நுண்ணறி தொலைபேசிகளிலும் பார்க்க விலை அதி உயர்வானது.
- கட்டற்ற மென்பொருட்களுக்கான ஆதரவு இல்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "iPhone". Cupertino, California: Apple. பார்க்கப்பட்ட நாள் October 23, 2011.
- ↑ "iPhone 4S Preliminary Benchmarks: ~800MHz A5, Slightly Slower GPU than iPad 2, Still Very Fast". AnandTech. October 11, 2011. பார்க்கப்பட்ட நாள் October 15, 2011.
- ↑ "iPhone 4S Teardown". iFixit. பார்க்கப்பட்ட நாள் October 13, 2011.
Check out the marking, specifically E4E4, denoting two 2 Gb LPDDR2 die—for a total of 4 Gb—or 512 MB
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Introducing Siri, யூடியூப் video by Apple
- Early iPhone 4S review பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம், MSNBC's Technolog