உள்ளடக்கத்துக்குச் செல்

கடமாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடமாடு
புதைப்படிவ காலம்:இயோசின் முதல்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

புள்ளி உடம்பு மீன், லேக்ரோப்ரைசு பைகாடலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெட்ராடோன்டிபார்மிசு
குடும்பம்:
பேரினம்
உரையினை காண்க[1]

கடமாடு, பசு மீன், பெட்டி மீன் (Ostraciidae) என அழைக்கப்படுவது சதுர, எலும்பு மீன்களின் குடும்பமாகும். இது டெட்ராடோன்டிஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்தது. இது கோளமீன் மற்றும் முட்டாள் கிளாத்தி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இது தற்போதுள்ள 6 பேரினங்களில் சுமார் 23 இனங்கள் கொண்டவையாக உள்ளது.

விளக்கம்

[தொகு]

இந்த குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள் பல்வேறு வண்ணங்கள் கொண்டதாக நிகழ்கின்றன. மேலும் அவற்றின் தோலில் உள்ள அறுகோண அல்லது "தேன் கூடு" வடிவ தகடுகள் அல்லது செதில்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் உடலில் உள்ள கனத்த தோலினால் இவற்றால் மெதுவாகவே நீந்த இயலும். இவற்றிற்கு முதுகுத் துடுப்போ அல்லது அடித்துடுப்போ இல்லாத நிலையில் இவை வால்புரம் மேலும் கீழும் உள்ள சிறு துடுப்புகளைக் கொண்டு நீந்தி நகர்கின்றன. இவற்றின் அறுகோண தகடு செதில்களால் இதன் உடல் ஒரு திடமான, முக்கோண அல்லது பெட்டி போன்ற மேலோடாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து துடுப்புகள், வால், கண்கள், வாய் போன்றவை நீண்டு செல்கின்றன. இந்த கனமான கவச செதில்கள் காரணமாக, இவற்றால் மெதுவே அசைய முடியும். ஆனால் வேறு சில மீன்கள் பெரிய மீன்களையே உண்ணும். லாக்டோஃப்ரிஸ் இனத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ராசிட் பெட்டி மீன்கள் தங்கள் தோலில் உள்ள நச்சை சுரந்து தன்னைச் சுற்றியுள்ள நீரில் கலந்து விடுகிறது. அது அவற்றை வேட்டையாடப்படாமல் பாதுகாக்கின்றது. பெரிய மீன்கள் பொதுவாக ஏறகுறைய முக்கோண வடிவில் இருந்தாலும், இளம் மீன்கள் பொதுவாக நீள்வட்டமானவை. இளைய மீன்கள் பெரும்பாலும் பெரியவறை விட பிரகாசமான வண்ணங்களைக் கொண்டுள்ளன. அகாந்தோஸ்ட்ரேசியன் குவாட்ரிகார்னிஸ் என்ற மாட்டு மீன் 50 சென்டிமீட்டர்கள் (20 அங்) வரை வளரக்கூடியது.

பரவல்

[தொகு]

இந்த மீன்கள் அத்திலாந்திக், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் பொதுவாக நடு அட்சரேகைகளில் காணப்படுகின்றன. இருப்பினும் புளோரிடா கடல் நீரில் முக்கியமாக வாழும் எருமை பெட்டிமீன் ( லாக்டோஃப்ரிஸ் டிரிகோனஸ் ) கேப் கோட் வரை வடக்கே காணப்படலாம்.

நச்சு பாதுகாப்பு

[தொகு]

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு மீன்கள் தங்கள் தோலின் மூலம் கேஷனிக் சர்பாக்டான்ட்களை சுரக்கின்றன. இது ஒரு இரசாயன பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படுகின்றன. [2] இதற்கு ஒரு உதாரணம் பஹுடாக்சின், நீரில் கரையக்கூடிய, படிக இரசாயன நச்சு ஆகும், இது ஆஸ்ட்ரேசியன் லென்டிஜினோசஸ் மற்றும் பெட்டி மீன் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது தோலில் இருந்து சுரக்கும் சளியில் உள்ளது. [3] பஹுடாக்சின் என்பது 3-அசிடாக்சிபால்மிடிக் அமிலத்தின் [4] கோலின் குளோரைடு எஸ்டர் ஆகும். இது முட்தோலிகளில் காணப்படும் ஸ்டீராய்டல் சபோனின்களைப் போலவே செயல்படுகிறது. [3] இந்த நச்சு சளி மீனில் இருந்து வெளியாகும் போது, அது விரைவில் சுற்றுப்புற நீரில் கரைந்து, சுற்றியுள்ள பகுதியில் உள்ள எந்த மீனையும் எதிர்மறையாக பாதிக்கிறது. இந்த நச்சு சில சவர்க்காரங்களை மிக நெருக்கமாக ஒத்திருக்கின்றன. [5]

வகைப்பாடு

[தொகு]
டெட்ரோசோமஸ் கிபோசஸ்
லாக்டோரியா ஃபோர்னாசினி
லாக்டோஃபிரிஸ் ட்ரிக்வெட்டர்

நூலாசிரியர் Keiichi Matsuura பின்வரும் வகைகளையும் இனங்களையும் பட்டியலிடுகிறார்: [1]

புதைபடிவ உயிரலகு

[தொகு]
  • இயோலாக்டோரியா பேரினம்
  • ஒலிகோலாக்டோரியா பேரினம்

வாழுகின்ற உயிரலகு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Matsuura K (2014). "Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014". Ichthyological Research 62 (1): 72–113. doi:10.1007/s10228-014-0444-5. 
  2. Abdulhaqq, A.J. & Shier, W.T. (1991): Icthyocrinotoxins and their potential use as shark repellents.
  3. 3.0 3.1 Boylan, D.B.; Scheuer, P.J. (1967). "Pahutoxin: a fish poison". Science 155 (3758): 52–56. doi:10.1126/science.155.3758.52. 
  4. Pubchem. "palmitic acid - C16H32O2 - PubChem".
  5. Kalmanzon, E., Aknin-Herrman, R., Rahamim, Y., Carmeli, S., Barenholz, Y. & Zlotkin, E. (2001). "Cooperative cocktail in a chemical defence mechanism of a trunkfish". Cellular & Molecular Biology Letters 6 (4): 971–84. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமாடு&oldid=3858799" இலிருந்து மீள்விக்கப்பட்டது