உள்ளடக்கத்துக்குச் செல்

கிஷ்கிந்தா காண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமார் மூலம் சுக்கீரிவனுடன் நட்பு கொள்ளும் இராமர்
சுக்கிரீவனும் வாலியும் போரிடும் போது மறைந்து நின்று இராமர் வாலியைக் கூரிய அம்பால் வீழ்த்துதல்
சீதையை தேடும் வேளையில் சம்பாதியை சந்தித்த அனுமன், ஜாம்பவான் மற்றும் அங்கதன்

கிஷ்கிந்தா காண்டம், (Kishkindha Kanda) வால்மீகி எழுதிய இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்திற்குப் பின் அமைந்த நான்காவது காண்டமாகும்.

இக்காண்டத்தில் இராவணால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி, காட்டில் இராம-இலக்குமணர்கள் தேடுதல், வாலிக்குப் பயந்து, மதங்க மகரிஷி தங்கியிருந்த மதங்க மலையில் ஜாம்பவனுடன் பதுங்கிக் கொண்டிருந்த சுக்கிரீவனுக்கு சொல்லின் செல்வன் அனுமான் மூலம் இராமருக்கு சுக்கிரீவனின் நட்பு கிடைத்தல், சீதையை மீட்க சுக்கிரீவன் வாக்கு தருதல், அதன் பிரதிபலனாக சுக்கிரீவனை கிட்கிந்தையின் மன்னராக முடிசூட்ட இராமர் உறுதியளித்தல், கிட்கிந்தையில் சுக்கிரீவனுக்கும் – வாலிக்கும் நடந்த போரில், இராமர் மறைந்து நின்று வாலியை கூரிய அம்பால் வீழ்த்துதல், பின்னர் கிட்கிந்தையின் மன்னராக சுக்கிரீவனுக்கும், பட்டத்து இளவரசராக அங்கதனுக்கும் இலக்குமணன் முடிசூட்டுதல், மழைக் காலத்திற்குப் பின் சுக்கிரீவன், சீதையைத் தேடி வானர வீரர்களை நான்கு திசைகளில் அனுப்புதல், அங்கதன் ஜாம்பவான், மற்றும் அனுமான் தலைமையிலான வானரப் படைகள் பரத கண்டத்தின் தெற்குப் பகுதிகளில் சீதையைத் தேடுவதற்கு புறப்படும் முன், இராமர் தனது கணையாழி மோதிரத்தை அனுமாரிடம் கொடுத்தல், கழுகரசன் ஜடாயுவின் அண்ணன் வயது முதிர்ந்த சம்பாதியை காண்பது, அங்கதன் சம்பாதியிடம் இராவணன் கடத்திச் சென்ற சீதையை தேடி அலைவதாகக் கூறல், இராவணன் சீதையை வானில் இலங்கைக்கு கடத்திச் சென்றதைப் பார்த்ததாக சம்பாதி கூறல், கடல் மீது பறந்து சென்று இலங்கையை அடையும் வல்லமை அனுமார் ஒருவருக்கும் மட்டுமே உண்டு என ஜாம்பவான் கூறல், அனுமார் இலங்கைச் சென்று சீதையை கண்டு வர ஒப்புக்கொள்தல், அனுமார் மகேந்திரமலை மீது ஏறி நின்று இலங்கை நோக்கி வானில் கடந்து செல்லுதலுடன் கிஷ்கிந்தா காண்டம் நிறைவு பெறுகிறது. [1][2]

கிட்கிந்தா காண்டத்திற்குப் பின் வரும் சுந்தர காண்டத்தில் இராமதூதன் ஆக இலங்கைக்குச் சென்ற அனுமார், சீதையப் பார்த்துப் பேசுதல், இலங்கை நகரை அழித்தல், பின் மீண்டும் கிஷ்கிந்தைக்கு வந்து, இராமரிடம் கண்டேன் சீதையைக் கூறி இராமரின் மனதை மகிழ்வுறச் செய்வது குறித்து விளக்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிட்கிந்தா காண்டம்
  2. Book Four - kishkindha kANDa

வெளி இணைப்புகள்

[தொகு]