உள்ளடக்கத்துக்குச் செல்

குனான் போசுபொரா சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குனான் போசுபொரா சம்பவம் (Kunan Poshpora incident) 1991 பிப்ரவரி 23 அன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட இந்திய பாதுகாப்புப் படையின் பிரிவுகள் காஷ்மீரில் அமைந்துள்ள குனான் மற்றும் போசுபோராவின் இரட்டை கிராமங்களில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாகக் கூறப்படும் சமயத்தில் நிழ்கந்த குழு கற்பழிப்பு ஆகும்.[1] இந்த இடம் குப்வாரா மாவட்டத்திற்கு தொலைவில் உள்ளது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தீவிரவாதிகள் அருகில் உள்ள வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினர்.[2] கிராமவாசிகள் சிலர் அந்த இரவில் பல பெண்கள் , பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினர். குற்றவியல் நடுவர் வருகைக்குப் பிறகு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கலவி செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 23 என பதிவாகியுள்ளது. எனினும், மனித உரிமைகள் கண்காணிப்பு இந்த எண்ணிக்கை 23 முதல் 100 வரை இருக்கலாம் என்று வலியுறுத்துகிறது.[3][4] இந்த குற்றச்சாட்டுகளை இந்திய இராணுவம் மறுத்தது. ஆதாரம் போதுமானதாக இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்து, குற்றச்சாட்டுகளை பயங்கரவாத பிரச்சாரம் என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டது.[5]

இந்த சம்பவத்தின் மீதான அரசாங்கத்தின் விசாரணைகள் குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றவை' என்று நிராகரித்தாலும்,[6] சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த விசாரணைகளின் நேர்மை மற்றும் அவை நடத்தப்பட்ட விதம் குறித்து கடுமையான சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளன, மனித உரிமைகள் கண்காணிப்பு அரசாங்கம் பின்வருமாறு கூறியது "மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை விடுவிக்கவும், குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தவர்களை அவமதிக்கவும் பிரச்சாரம். மேற்கொள்ளப்படும்" எனக் கூறியது. [7] [8]

சம்பவம்

[தொகு]

நியூயார்க் டைம்ஸ் ,குனான் போசுபோரா சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் தீவிரவாதிகள் அருகில் உள்ள பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது, இது படைகளின் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுத்தது. [9] 23 பிப்ரவரி 1991 அன்று மத்திய சேமக் காவல் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ராணுவப் படையினர் குனான் மற்றும் போசுபோராவின் இரு கிராமங்களை சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள ஆண்கள் வெளியில் கூடி, தீவிரவாத நடவடிக்கை பற்றி விசாரித்த போது கிராமத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன . தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, கிராமவாசிகள் சிலர் அந்த இரவில் பல பெண்களை படையினர் பாலியல் வன்கலவி செய்ததாக கூறப்படுகிறது. [9]

பின்னர் ஹிஷ்பி இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதி தளபதி முஷ்டாக் உல்-இஸ்லாம் நியூயார்க் டைம்ஸுக்கு அதே பகுதியில் நன்கு பாதுகாக்கப்பட்ட மறைவிடத்திலிருந்து பேட்டி அளித்தார். அவரது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர ஆதரித்தது. அவரது குழுவினர் ஒலிபெருக்கியில் செய்திகளை ஒளிபரப்பி, பாதுகாப்புப் பணியாளர்களை இஸ்லாத்திற்கு மாறுமாறு கேட்டுக்கொண்டனர். தீவிரவாதத் தலைவர் தனது குழு முதலில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை மறுத்தார், ஆனால் படைகளை எதிர்த்துப் போராட தனது படைகள் ஆயுதம் ஏந்தியதாகக் கூறினார். [9]

டிசம்பர் 2017 இல், உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக ஜே & கே அரசாங்கம் இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மேல்முறையீடுகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. [10]

சான்றுகள்

[தொகு]
  1. Jha, Prashant. "Unravelling a 'mass rape'" (in en). The Hindu இம் மூலத்தில் இருந்து 2017-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170227130251/http://www.thehindu.com/opinion/op-ed/unravelling-a-mass-rape/article4892195.ece. 
  2. Crossette, Barbara; Times, Special To The New York (7 April 1991). "India Moves Against Kashmir Rebels". The New York Times: p. 3 இம் மூலத்தில் இருந்து 2012-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/68IE2kLaY?url=http://www.nytimes.com/1991/04/07/world/india-moves-against-kashmir-rebels.html?pagewanted=all&src=pm. 
  3. Abdication of Responsibility: The Commonwealth and Human Rights. Human Rights Watch. 1991. pp. 13–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56432-047-6.
  4. International Human Rights Organisation (1992). Indo-US shadow over Punjab. International Human Rights Organisation."...reports that Indian armymen belonging to the 4th Rajputana Rifles of the 68 Mountain Division entered a settlement at Kunan Poshpora in Kupwara district on the night of February 23–24, 1991 and gangraped a minimum of 23 and a maximum of 100 women of all ages and in all conditions."
  5. "Mass Rape Survivors Still Wait for Justice in Kashmir". Trustlaw - Thomson Reuters Foundation. Reuters. 7 Mar 2012 இம் மூலத்தில் இருந்து 9 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/68ICeGR3T?url=http://www.trust.org/trustlaw/news/mass-rape-survivors-still-wait-for-justice-in-kashmir. 
  6. "Mass Rape Survivors Still Wait for Justice in Kashmir". Trustlaw - Thomson Reuters Foundation. Reuters. 7 Mar 2012 இம் மூலத்தில் இருந்து 9 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/68ICeGR3T?url=http://www.trust.org/trustlaw/news/mass-rape-survivors-still-wait-for-justice-in-kashmir. 
  7. "Human Rights Watch World Report 1992". World Report 1992. Human Rights Watch. 1 Jan 1992. Archived from the original on 9 June 2012.
  8. "Human Rights Watch World Report 1992 - India". UNHCR Refworld. 1 Jan 1992. Archived from the original on 2011-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  9. 9.0 9.1 9.2 Crossette, Barbara; Times, Special To The New York (7 April 1991). "India Moves Against Kashmir Rebels". The New York Times: p. 3. https://www.nytimes.com/1991/04/07/world/india-moves-against-kashmir-rebels.html?pagewanted%3Dall%26src%3Dpm. 
  10. "1991 Kunan Poshpora mass rape incident: Supreme Court admits Jammu and Kashmir's plea". newindianexpress.com. 4 December 2017. http://www.newindianexpress.com/nation/2017/dec/04/1991-kunan-poshpora-mass-rape-incident-supreme-court-admits-jammu-and-kashmirs-plea-1718371.html.