உள்ளடக்கத்துக்குச் செல்

குமனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமன்-கிப்சாக் கூட்டமைப்பு
10ஆம் நூற்றாண்டு–1241
அண். கி. பி. 1200ல் குமனியா.
அண். கி. பி. 1200ல் குமனியா.
நிலைகானரசு
பேசப்படும் மொழிகள்கிப்சாக் மொழிகள்
(குமன் மொழி உள்பட)
சமயம்
தெங்கிரி மதம், கிறித்தவம்
வரலாறு 
• தொடக்கம்
10ஆம் நூற்றாண்டு
• முடிவு
1241
முந்தையது
பின்னையது
கிமேக்-கிப்சாக் கூட்டமைப்பு
கசரியா
தங்க நாடோடிக் கூட்டம்

குமனியா என்பது குமன்-கிப்சாக் கூட்டமைப்பின் இலத்தீன் பெயராகும். குமனியா என்பது ஒரு பழங்குடியினக் கூட்டமைப்பாகும். இது ஐரோவாசியப் புல்வெளியின் மேற்குப் பகுதியில் 10 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அமைந்திருந்தது. இந்தக் கூட்டமைப்பில் இரண்டு துருக்கிய நாடோடிப் பழங்குடியினங்கள் முக்கியத்துவமுள்ளவையாக இருந்தன. அவர்கள் குமன்கள் மற்றும் கிப்சாக்குகள். குமன்கள் போலோவிதிசியர்கள் அல்லது போல்பன் என்றும் அழைக்கப்பட்டனர். இசுலாமிய ஆதாரங்களில் குமனியாவானது தெசுதி கிப்சாக் என்று அறியப்பட்டுள்ளது. பாரசீக மொழியில் இதன் பொருள் "கிப்சாக்குகளின் புல்வெளி" அல்லது "கிப்சாக்குகளுக்குப் புகலிடம் கொடுத்துள்ள அயல்நாட்டு நிலம்" என்பதாகும்.[1] உருசிய ஆதாரங்கள் இந்நாட்டை "போலோவிதிசியப் புல்வெளிகள்" அல்லது "போலோவிதிசியச் சமவெளி" என்று அழைத்தன.[2]

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Adjiev M. Eskenderovich, The Kipchaks, An Ancient History of the Turkic People and the Great Steppe, Moscow 2002, p.30
  2. Drobny, Jaroslav (2012), Cumans and Kipchaks: Between Ethnonym and Toponym (PDF), pp. 205–217
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமனியா&oldid=3454464" இலிருந்து மீள்விக்கப்பட்டது