உள்ளடக்கத்துக்குச் செல்

கெய்த் ஹேரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெய்த் ஹேரிங் (மே 4, 1958 - பிப்ரவரி 16, 1990), ஒரு அமெரிக்க ஓவியர். 1980-களில், சமூகம், ஓரினச்சேர்க்கை தொடர்பாக இவர் வரைந்த கிராஃபிட்டி, பாப் ஓவியங்களால் புகழ் பெற்றார். தன்னுடைய சொத்துக்களை குழந்தைகள் காப்பகத்துக்கும், அவர்களுடைய மருத்துவத்துக்கும் நன்கொடையாக வழங்கினார். இவருடைய ஓவியம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹேரிங் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். 1990 ஆம் ஆண்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். 1989 ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த கெய்த் ஹேரிங் தொண்டு நிறுவனம் தற்போதும் குழந்தைகளுக்கான சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்த்_ஹேரிங்&oldid=3275994" இலிருந்து மீள்விக்கப்பட்டது