உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிநாத் முண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிநாத் முண்டே
ஊரக வளர்ச்சி அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 03 சூன் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜெய்ராம் ரமேஷ்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்செயசிங்ராவ் கெய்க்வாட் (தேசியவாத காங்கிரசு)
தொகுதிபீடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1949 (1949-12-12) (அகவை 74)
நாத்ரா சிற்றூர், பரலி, மகாராட்டிரம்
இறப்புசூன் 3, 2014(2014-06-03) (அகவை 64)
புது தில்லி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிராத்ன்யா முண்டே
பிள்ளைகள்பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ
வாழிடம்புது தில்லி
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்கோபிநாத் முண்டே வலைத்தளம்

கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூன் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.

இறப்பு

[தொகு]

2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Gopinath Munde dies in a road accident in Delhi" இம் மூலத்தில் இருந்து 2014-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140606112412/http://ibnlive.in.com/news/gopinath-munde-dies-in-a-road-accident-in-delhi/476309-37-64.html. 
  2. "Interview : Gopinath mundeHe". Rediff இம் மூலத்தில் இருந்து 2013-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130823065737/http://www.rediff.in/news/aug/09mun.htm. 
  3. "கோபிநாத் முண்டே உயிரிழந்தார் (ஆ)". பார்க்கப்பட்ட நாள் சூன் 3, 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]