உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்
Chandra X-ray Observatory

பொதுத் தகவல்கள்
நிறுவனம்நாசா, SAO, CXC
ஏவிய தேதி ஜூலை 23, 1999
சுற்றுவிலக்கம்த/இ
திணிவு4 800 கிகி, 10 600 இறா
சுற்றுப்பாதை உயரம் 10 000 கிமீ (perigee), 140 161 கிமீ (apogee)
சுற்றுக் காலம் 3858 நிமி, 64.3 மணி
தொலைநோக்கி வகை 4 nested pairs of grazing incidence paraboloid and hyperboloid mirrors
அலைநீளம்எக்ஸ் கதிர்
விட்டம்1.2 மீ, 3.9 அடி
பெறும் பரப்பு 0.04 மீ² (1 keV இல்), 0.4 அடி² (1 keV இல்)
குவியத் தூரம் 10 மீ, 33 அடி
இணையத்தளம்
http://chandra.harvard.edu/

சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் (Chandra X-ray Observatory) என்பது, கொலம்பியா விண்ணோடத்தில் "எஸ்டிஎஸ்-93" இல், நாசாவால், 1999, ஜூலை 23 ஆம் நாள் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். வெண் குறு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறுவதற்குரிய திணிவெல்லையைத் தீர்மானித்த இந்திய-அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் இயற்பியலாளரின் பெயரைத்தழுவி இந்த அவதான நிலையத்துக்குப் பெயரிடப்பட்டது.[1] நாசாவின் நான்கு பெரும் அவதான நிலையங்களில் இது மூன்றாவது ஆகும். ஏவுமுன் இது உயர்தர எக்ஸ்-கதிர் வானியற்பியல் வசதி எனப்படது. இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது. முக்கியமாக சந்திராவில் பொருத்தப்பட்ட ஆடிகளின் உயர்ந்த கோணப் பிரிதிறன் (angular resolution) காரணமாகவே இது சாத்தியம் ஆகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. "And the co-winners are..." Harvard-Smithsonian Center for Astrophysics. 1998. Archived from the original on ஜனவரி 12, 2014. பார்க்கப்பட்ட நாள் January 12, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)