சாங்காய் உலக நிதி மையம்
சாங்காய் உலக நிதி மையம் | |
---|---|
上海环球金融中心 | |
2010ல் சாங்காய் உலக நிதி மையம். | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | Complete[1] |
வகை | அலுவலகம், விடுதி, அருங்காட்சியகம், பார்வை மேடை, வண்டிகள் தரிப்பிடம், சில்லறை வணிகம் |
இடம் | 100 செஞ்சுரி அவெனியூ, புடோங், சாங்காய், சீனா |
கட்டுமான ஆரம்பம் | 1997 |
நிறைவுற்றது | 2008 |
திறப்பு | ஆகத்து 28, 2008 |
செலவு | RMB ¥ 8.17 billion (USD $ 1.20 billion) |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 494.4 m (1,622.0 அடி) / 492.0 m (1,614.2 அடி) |
கூரை | 487.4 m (1,599.1 அடி)[2] |
மேல் தளம் | 474.0 m (1,555.1 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 101 |
தளப்பரப்பு | 381,600 m2 (4,107,500 sq ft) |
உயர்த்திகள் | 91 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கோன் பெடெர்சன் ஃபாக்சு |
மேம்பாட்டாளர் | மோரி பில்டிங் கம்பனி. |
அமைப்புப் பொறியாளர் | லெசுலி ஈ. ராபர்ட்சன் அசோசியேட்சு RLLP |
முதன்மை ஒப்பந்தகாரர் | சீன அரசக் கட்டுமானப் பொறியியல் நிறுவனம், சாங்காய் கான்சுட்ரக்சன் (குழுமம்) செனரல் கம்பனி ஆகியன. |
மேற்கோள்கள் | |
[3][4][5] |
சாங்காய் உலக நிதி மையம் சீனாவின் சாங்காய் நகரின் புடோங் பகுதியில் அமைந்துள்ள அதியுயர் வானளாவி ஆகும். கோன் பெடெர்சன் ஃபாக்சு (Kohn Pedersen Fox) என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இவ்வானளாவி ஒரு கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம். இதில், அலுவலகங்கள், விடுதிகள், மாநாட்டு மண்டபங்கள், பார்வையாளர் மேடை போன்றனவும், நிலத்தளத்தில் ஒரு அங்காடியும் உள்ளன. பாக் அயத் சாங்காய் என்னும் விடுதி நிறுவனம் இக்கட்டிடத்தில் 174 அறைகளைக் கொண்ட ஒரு விடுதியை நடத்தி வருகிறது. இவ்விடுதி வானளாவியின் 79 ஆவது தளம் முதல் 93 ஆவது தளம் வரையுள்ள தளங்களில் அமைந்துள்ளது. இதனால், கட்டிடங்களில், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த விடுதிகளில் இரண்டாவது நிலையில் இது உள்ளது.
2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் தேதி இவ்வானளாவி அதன் முழு உயரமான 492 மீட்டர்களை (1,614.2 அடிகள்) எட்டியபோது அப்போதைய நிலையில் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெயரையும் சீனாவின் மிக உயரமான கட்டிடம் என்னும் பெயரையும் அது பெற்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "China's tallest and timely arrival". பிபிசி. 28 Aug 2008.
- ↑ "CTBUH - கட்டிமுடிக்கப்பட்ட உலகின் 10 கட்டிடங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2008-09-20. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.
- ↑ "சாங்காய் உலக நிதி மையம் - SkyscraperPage.com". பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.
- ↑ "Shanghai tops out world's third-tallest building". பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.
- ↑ "Shanghai World Financial Center - www.emporis.com". பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.