உள்ளடக்கத்துக்குச் செல்

சாமியா அல்-அமௌதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாமியா அல்-அமௌதி (Samia al-Amoudi) ஓர் சவூதி அரேபிய மகப்பேறியல் நிபுணரும் மற்றும் மகளிர் நலவியல் நிபுணரும், சுகாதார ஆர்வலரும் மற்றும் பேராசிரியரும் ஆவார். இவர் சேக் முகமது உசைன் அல்-அமௌதி மார்பக புற்றுநோய் மையத்தின் தலைவராக உள்ளார். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தனக்குத்தானே புற்றுநோய் சோதனை மேற்கொண்டார். பகுரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிராந்திய, அரசுகளுக்கிடையேயான, அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமான வளைகுடா நாடுகளின் அமைப்பிலிருந்து சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஒன்றியத்தில் சேர்ந்த முதல் பெண் ஆவார்.[1]

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

1981 ஆம் ஆண்டில், கிங் அப்துல்அசீஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் மருத்துவர்களில் அல்-அமௌதியும் ஒருவர்.[2]

ஏப்ரல் 2006 இல், தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். அதற்காக இவர் கீமோதெரபி செய்து கொண்டார்.[2] அல் மதீனா செய்தித்தாளின் வாராந்திர கட்டுரையில் தொடர்ச்சியான கட்டுரைகளில் தனக்கு ஏற்பட்ட நோயைப் பற்றிய தனது அனுபவத்தைப் பற்றி பகிரங்கமாக எழுதிய முதல் சௌதி பெண் இவர்.[3] மேலும், இவர் தினசரி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றினார்.[2]


மார்ச் 2007 இல், அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசுச் செயலாளர் காண்டலீசா ரைஸ் சர்வதேச வீரதீரப் பெண்கள் விருதினை இவருக்கு வழங்கினார்.[4][5]

2010 ஆம் ஆண்டில், அரேபிய வணிகத்தின் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க அரேபியர்களின் வருடாந்திர பட்டியலில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.[2] 2015 ஆம் ஆண்டில் 37 வது இடத்திலும், 2016 ஆம் ஆண்டில் "100 மிக சக்திவாய்ந்த அரபு பெண்கள் 2016-சுகாதாரம் மற்றும் அறிவியல்" பட்டியலில் 66 வது இடத்திலும் அல்-அமௌதி தரவரிசைப்படுத்தப்பட்டார்.[6]

தனது புற்றுநோய் சிகிச்சையை முடித்த 2012 ஆம் ஆண்டு முதல், ஜித்தாவின் கிங் அப்துல்அசீஸ் பல்கலைக்கழகத்தில் மார்பக புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் சேக் முகமது உசைன் அல்-அமௌதி சிறப்பு மையத்தின் தலைவராக பணியாற்றினார். மேலும் ஜிஇ ஹெல்த்கேர் #GetFit தூதராகவும் பணியாற்றுகிறார்.[1]

அல்-அமௌதி, சேக் முகமது உசைன் அல்-அமௌதி மார்பக புற்றுநோய் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். மேலும் அறிவியல் மார்பக புற்றுநோயின் தலைவராகவும், மார்பக சுகாதார உலகளாவிய முன்முயற்சிக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராகவும், சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல்அசீஸ் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், மகப்பேறியல் மகளிர் மருத்துவ நிபுணராகவும் இருக்கிறார்.

படைப்புகள்.

[தொகு]
  • பிரெஸ்ட் கேன்சர், பிரேக் த சைலன்ஸ், 2007.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Meet Samia Al-Amoudi, #GetFit Saudi Arabia Ambassador | GE Healthcare The Pulse". Newsroom.gehealthcare.com. 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
  2. 2.0 2.1 2.2 2.3 "Power 100". ArabianBusiness.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Shalhoub, Lulwa. "Samia Al-Amoudi: The Most Courageous Saudi Woman". arabnews.com (SAUDI RESEARCH & PUBLISHING COMPANY). https://www.arabnews.com/node/296367. 
  5. "Secretary of State Confers the First International Women of Courage Awards" (PDF). 7 March 2007. Archived from the original (PDF) on 16 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் April 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "InPics: The 100 Most Powerful Arab Women 2016 - Healthcare & Science". arabianbusiness.com. Arabian Business. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  7. Piana, Ronald. "Book Review: Breast Cancer, Break the Silence". ascopost.com. HSP News Service. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]