சாருக்
Appearance
சாருக் என்பவர் 1405 முதல் 1447 வரை தைமூரியப் பேரரசை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 20 ஆகஸ்ட் 1377 அன்று பிறந்து 13 மார்ச் 1447 அன்று இறந்தார்.
இவர் மத்திய ஆசிய மன்னனான தைமூரின் மகன் ஆவார். எனினும் இவர் தைமூரியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளை மட்டுமே ஆண்டார். மேற்குப் பகுதிகளை தைமூரின் இறப்பிற்குப் பிறகு மற்றவர்கள் பிடித்துக் கொண்டனர்.
பட்டுப் பாதையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் காரணமாக செல்வந்தர் ஆனார். இவரது தலைநகரம் ஹெராத் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Lentz, Thomas W.; Lowry, Glenn D. (1989). Timur & Princely Vision. Smithsonian. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87474-706-5.