சிலோவாக்கிய தேசியக் காற்பந்து அணி
கூட்டமைப்பு | சிலோவாக் கால்பந்து வாரியம் | ||
---|---|---|---|
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தன்னக விளையாட்டரங்கம் | அன்டோனா மலத்தீன்சுகி அரங்கு துப்னோம் அரங்கு | ||
பீஃபா குறியீடு | SVK | ||
பீஃபா தரவரிசை | 24 (2 சூன் 2016) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 14 (ஆகத்து 2015) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 150 (டிசம்பர் 1993) | ||
எலோ தரவரிசை | 28 (9 செப்டம்பர் 2015) | ||
அதிகபட்ச எலோ | 25 (சூன் 2015) | ||
குறைந்தபட்ச எலோ | 71 (அக்டோபர் 2011) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
சிலவாக்கியா 2–0 செருமனி (பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா; 27 ஆகத்து 1939) இரண்டாவது சிலோவாக் குடியரசு: ஐக்கிய அரபு அமீரகம் 0–1 சிலவாக்கியா (துபாய், ஐக்கிய அரபு அமீரகம்; 2 பெப்ரவரி 1994) | |||
பெரும் வெற்றி | |||
சிலவாக்கியா 7–0 லீக்கின்ஸ்டைன் (பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா; 8 செப். 2004) சிலவாக்கியா 7–0 சான் மரீனோ சிலோவாக்கியா; 13 அக்டோபர் 2007) சிலவாக்கியா 7–0 சான் மரீனோ (பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா; 6 சூன் 2009) | |||
பெரும் தோல்வி | |||
அர்கெந்தீனா 6–0 சிலவாக்கியா (மென்டோசா, அர்செந்தீனா; 22 சூன் 1995) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2010 இல்) | ||
சிறந்த முடிவு | 16களின் அணி, 2010 | ||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2016 இல்) | ||
சிறந்த முடிவு | TBD |
சிலோவாக்கியா தேசிய காற்பந்து அணி (Slovakia national football team, Slovenské národné futbalové mužstvo) என்பது சிலோவாக்கியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது சிலோவாக்கிய காற்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது.[1] 1993 இல் சிலோவாக்கியா என்ற புதிய நாடு உருவானதை அடுத்து இவ்வணி செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணியில் இருந்து பிரிந்து புதிய அணியாக உருவெடுத்தது.
சிலோவாக்கிய அணி 2010 உலகக்கோப்பை காற்பந்து, யூரோ 2016 ஆகியவற்றில் விளையாடத் தகுதி பெற்றது. 2010 உலகக்கோப்பையின் போது சிலோவாக்கிய அணி குழுநிலை ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வென்று, அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. இதுவே இவ்வணி விளையாடிய முதலாவது முக்கிய கால்பந்து வாகையாளர் போட்டித்தொடராகும். சிலோவாக்கியா பிரான்சில் நடைபெற்ற யூரோ 2016 ஐரோப்பியப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்று, பிஃபா உலகத் தரவரிசையில் 15வது இடத்தைக் கைப்பற்றியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Slovakia v Latvia, 25 March 2016". 11v11.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- Slovak Football Association official website பரணிடப்பட்டது 2008-10-26 at the வந்தவழி இயந்திரம்
- Profil at FIFA official website பரணிடப்பட்டது 2016-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Profil at UEFA official website
- RSSSF archive of results 1939–2009
- RSSSF archive of most capped players and highest goalscorers