சீனாவில் காற்றுத் திறன்
சீனாவில் காற்றுத் திறன் (Wind power in China) பெரிய நிலப்பரப்பு மற்றும் நீண்ட கடற்கரையில் இருந்து கிடைப்பதால் விதிவிலக்கு ஏதுமின்றி ஏராளமான காற்று மூலங்களை இந்நா பெற்றிருப்பதாகக் கருதலாம்:[1]. சீனா தன்நாட்டு நிலப்பரப்பிலிருந்து 2380 கிகாவாட்டு காற்றுத் திறனையும் கடல்பரப்பிலிருந்து 200 கிகாவாட் காற்றுத் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது.[2]
சூன் 2015 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் 105 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அமைப்புகள் நிறுவப்பட்டன. சீனாவில் இருக்கும் ஒவ்வொரு அணுக்கரு நிலையத்திலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைக் காட்டிலும் இது அதிகமாகும்[3]. 2014 ஆம் ஆண்டில் காற்றாலை மின்னுற்பத்தி 138 கிலோவாட்மணியாக அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.6 சதவீதமாக இருந்தது[4]. இந்த அளவு 2012 உற்பத்தியான 99 கிலோவாட்மணி மின்சாரத்தை விட அதிகமாகும்[5]
100 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்ட காற்றாலைகளை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமைத்து ஆண்டுக்கு 190 கிலோவாட்மணி மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்று சீனா 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டது[6]. ஆனால் இந்த இலக்கு விரைவாகவே எட்டப்பட்டு 120 கிகாவட் காற்றாலைகள் அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டிவிடும் நம்பிக்கையுடன் சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[7] மின்கட்டமைப்பு மற்றும் மின் இணைப்பு பிரச்சினைகள் காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கிலோவாட் மணி என்ற இலக்கு சற்று கூடுதலான் இலக்காகும். 2014 ஆம் ஆண்டில் சீனா கூடுதலாக 23கிகாவாட் காற்றுத் திறனை சேர்த்தது. 2016 – 2020 ஆம் ஐந்தாண்டின் 13 ஆவது காலத் திட்டத்தில் சீனா 100 மில்லியன் கிலோவாட் காற்று திறனை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது[8].
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காற்றாலை மின்சாரம் ஒரு முக்கியமான கூறாகும் என்று சீனா அடையாளம் கண்டுள்ளது[9] . 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா தன்நாட்டுக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் காற்றாலை மின்னுற்பத்தியினால் அடைந்துவிடும் என்று ஆர்வார்டு மற்றும் திசிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்[10]. ஆனாலும் நடைமுறையில் சீனா காற்றுத்திறனைப் பயன்படுத்தி காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிறப்பான செயல்பாடு இன்றியே காணப்படுகிறது[11]. 2014 ஆம் ஆண் டில் அமெரிக்கா அதிக அளவு மின்சாரத்தை காற்றிலிருந்து உற்பத்தி செய்துள்ளது.[12]
2008 ஆம் ஆண்டு இறுதியில் குறைந்தது 15 சீன நிறுவனங்களாவது காற்றாலைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பகுதிப்பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன[13]. பொதுவாக சுழலிகள் 1.5 மெகாவாட் முதல் 3 மெகா வாட் வரையிலான அளவுகளில் காணப்பட்டன. வெளிநாட்டு காற்றாலை உற்பத்தியாளர்களுடன் கோல்டுவிண்டு, டோங்ஃபேங் எலக்டிரிக் மற்றும் சினோவெல் போன்ற சீனாவின் முன்னனி நிறுவனங்களும் சீனாவில் காற்றாலைகளை உற்பத்தி செய்தன[14] along with most major foreign wind turbine manufacturers.[15]. 2008 ஆம் ஆண்டில் சீனா சிறுதொழிலாகவும் 80000 காற்றுச்சுழலிகளை உற்பத்தி செய்தது. இந்த வளர்ச்சியின் காரணமாகவே சீனாவின் காற்றாலை மின் உற்பத்தித் தொழில் உலகத்தின் நிதிநெருக்கடிகளுக்கு ஆளாகாமல் தடையின்றி வளர்கிறது[14] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oceans of Opportunity: Harnessing Europe’s largest domestic energy resource pp. 18-19.
- ↑ Wind provides 1.5% of China's electricity Wind Power Monthly, 5 December 2011
- ↑ http://economictimes.indiatimes.com/news/international/business/chinas-wind-power-capacity-to-hit-120-gigawatts-by-2015/articleshow/49428252.cms
- ↑ http://cleantechnica.com/2015/01/28/chinas-wind-energy-output-dropped-2014/
- ↑ "China was world's largest wind market in 2012". Renewable Energy World. 4 February 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2015.
- ↑ "China revises up 2015 renewable energy goals: report". Reuters. August 29, 2011. Archived from the original on நவம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2015.
- ↑ http://www.businessinsider.in/Chinas-wind-power-capacity-to-hit-120-gigawatts-by-2015-end/articleshow/49428753.cms
- ↑ http://www.bizjournals.com/prnewswire/press_releases/2015/10/14/MN27803
- ↑ Gow, David (2009-02-03). "Wind power becomes Europe's fastest growing energy source". London: Guardian. http://www.guardian.co.uk/environment/2009/feb/03/wind-power-eu. பார்த்த நாள்: 2010-01-31.
- ↑ "China Could Replace Coal with Wind". Ecogeek.org. Archived from the original on 2009-10-15. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
- ↑ Andrews-Speed, Philip (November 2014). "China’s Energy Policymaking Processes and Their Consequences". The National Bureau of Asian Research Energy Security Report. http://nbr.org/publications/element.aspx?id=790. பார்த்த நாள்: December 24, 2014.
- ↑ http://cleantechnica.com/2015/01/28/chinas-wind-energy-output-dropped-2014/
- ↑ "Caprotti Federico (2009) China's Cleantech Landscape: The Renewable Energy Technology Paradox ''Sustainable Development Law & Policy '' Spring 2009: 6–10" (PDF). Archived from the original (PDF) on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
- ↑ 14.0 14.1 REN21 (2009). Renewables Global Status Report: 2009 Update பரணிடப்பட்டது 2009-06-12 at the வந்தவழி இயந்திரம் p. 16.
- ↑ Adrian Lema and K. Ruby, “Towards a policy model for climate change mitigation: China's experience with wind power development and lessons for developing countries”, Energy for Sustainable Development, Vol. 10, Issue 4.
புற இணைப்புகள்
[தொகு]- Wind Power China பரணிடப்பட்டது 2012-06-05 at the வந்தவழி இயந்திரம் (Chinese)
- Chinese Wind Energy Association பரணிடப்பட்டது 2008-08-09 at the வந்தவழி இயந்திரம் (Chinese)
- China Wind Systems Announces Completion of Large Scale Manufacturing Facility for Wind Components
- China wind power report 2007 (Greenpeace China) பரணிடப்பட்டது 2008-03-07 at the வந்தவழி இயந்திரம்
- China wind power capacity growing
- China Wind Systems Begins Producing Forged Products at New Facility
- China Outlines Clean Power Blueprint
- World Wind Energy Association பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம்