உள்ளடக்கத்துக்குச் செல்

சீரிசை சீருடற்பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005 உலக விளையாட்டுக்களில் செக் குடியரசின் டொமினிகா செர்வென்கோவா நாடா வழக்கமுறைகளை நிகழ்த்துதல்
பிரெஞ்சு அணி
2000 சிட்னி ஒலிம்பிக்கில் கிரீசைச் சேர்ந்த சீரிசை சீருடற் பயிற்சியாளர்கள்

சீரிசை சீருடற்பயிற்சிகள் (Rhythmic gymnastics, சுருக்கம்:RG) என்ற தனிநபர்கள் அல்லது அணிகள் (பொதுவாக ஐந்து நபர்கள்) பங்கேற்கும் விளையாட்டில் போட்டியாளர்கள் ஒன்று அல்லது இரண்டு பயிற்சிக் கருவிகளை கையாள்வதாகும். இந்த பயிற்சிக் கருவிகள்: கயிறு, வளையம், பந்து, பிடிதடிகள்,நாடா மற்றும் கட்டற்றவை (கருவிகள் ஏதுமின்றி, தரைப் பயிற்சிகள்) ஆகும். சீரிசை சீருடற்பயிற்சி பாலே நடனம், சீருடற்பயிற்சிகள், நடனம், மற்றும் கருவிக் கையாளுதல் கூறுகளை ஒன்றிணைத்தது. இந்தப் போட்டியில் தாவல்கள், சுழலல்கள், வளைதன்மை, கருவிக் கையாளல், நிறைவேற்றம் மற்றும் கலைநயம் ஆகியவற்றிற்காக மதிப்பிடப்பட்டு நடுவர் குழாம் வழங்கும் மிகக் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றவர் அல்லது அணி வாகை சூடுவர்.

பன்னாட்டுப் போட்டிகளில் பதினாறு வயதிற்குட்பட்டோர், இளையோர், என்றும் மற்றவர்கள் முதியோர் என்றும் அவர்களது பிறந்தநாளைக் கொண்டு பிரிக்கப்படுகின்றனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]