சுடலைக் குயில்
சுடலைக் குயில் | |
---|---|
ஒரு முதிர்ந்த பறவை (இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. jacobinus
|
இருசொற் பெயரீடு | |
Clamator jacobinus Boddaert, 1783 | |
அடர் பச்சை - ஆண்டு முழுவதும் காணப்படும் மஞ்சள்- வேனில் காலத்தில் மட்டும் நீலம்- பனிக்காலத்தில் cream – passage only | |
வேறு பெயர்கள் | |
Oxylophus jacobinus |
சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் (Jacobin Cuckoo or Pied Cuckoo – Clamator jacobinus) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் குயிலினப் பறவை. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வண்ணம் இப்பறவையின் வருகை இருப்பதாக இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் ஓரளவே உண்மை இருப்பதாக மைகிரண்ட் வாச்சின் ஆய்வின் மூலம் அறியப்படுகிறது [2]. இந்தியப் பழங்கதையியலில் இது சாதகப் பறவை எனவும் அறியப்படுகிறது. தொன்மங்களில் இப்பறவை மழை நீரை மட்டும் அருந்தும் என்றும், அதற்காக மேகத்தை நோக்கி வாயைத் திறந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.[3] இப்பறவையாது தவிட்டுக் குருவி போன்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடக் கூடியது.
வகைபிரித்தல்
[தொகு]இதில் இனப்பெருக்க எல்லையை அடிப்படையாக்க் கொண்ட மூன்று கிளையினங்கள் உள்ளன:[4]
- C. j. serratus (Sparrman, 1786) – தென்னாப்பிரிக்கா, தெற்கு சாம்பியா
- இலங்கை கொண்டைக் குயில் C. j. pica (Hemprich & Ehrenberg, 1833) – சகாராவிற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் உள்ள வடக்கு சாம்பியா மலாவி மற்றும் வடமேற்கு இந்தியா முதல் நேபாளம், மியான்மர் வரை
- C. j. jacobinus (Boddaert, 1783) – தென் இந்தியா, இலங்கை, தென் மியான்மர்
உடல் தோற்ற விளக்கம்/கள அடையாளங்கள்
[தொகு]சுடலைக் குயில் 13 அங்குலம் அல்லது 31 cm – 33 cm நீளமுள்ளது. இதன் மேலுடல் சிறகுத்தொகுதி (தலை, கொண்டை உள்பட) கருப்பாக (சற்றே மினுமினுக்கும் பச்சை நிறங்கலந்து இருக்கும். பறத்தலுக்குதவும் சிறகுகள் கரும்பழுப்பாகவும் ஊடே அகன்ற வெண்பட்டையுடனிருக்கும். நீண்ட வால் (18 cm) வெண்ணிற முனையுடன் காணப்படும். அடியுடல் வெண்மையாகவிருக்கும். அலகு கருப்பாகவும் கால் சற்றே நீலமாகவும் இருக்கும்.[5]
பரவல்
[தொகு]சுடலை குயில் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் சமவெளிப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் (8000 அடி உயரத்திலும் கூட) காணப்படும்.
இந்தியாவில் காணப்படும் இரு உள்ளினங்கள்
[தொகு]Clamator jacobinus என்ற கிளையினமானது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் இங்கேயே இருக்கும் உள்ளூர்ப் பறவையாகும். பொதுவாக கல்லுக்குருவிகளின் கூட்டில் முட்டையிடும். Clamator jacobinus pica என அழைக்கப்படும் துணையினம் ஆப்பிரிக்காவிலிருந்து மழைக்காலத்தின் துவக்கத்தில் வட இந்தியாவை வந்தடையும். குளிர் காலத்தில் ஆப்பிரிக்கா திரும்பும்.[6] இது உள்ளூர் சுடலைக் குயிலை விட சற்று பெரியது.[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Clamator jacobinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22683800A93002088. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683800A93002088.en. https://www.iucnredlist.org/species/22683800/93002088. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ மைகிரண்ட் வாச்-
- ↑ "பறவைகள்: நம்பிக்கைகளும் உண்மையும்". Hindu Tamil Thisai. 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
- ↑ 5.0 5.1 Popular Handbook of Indian Birds-Hugh Whistler-4 ed.-Norman Kinnear-1949-p. 324
- ↑ "குயிலே... குயிலே." Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.