சுற்றுச்சூழலின் நிலை
சுற்றுச்சூழலின் நிலை (State of the Environment) என்பது பொதுவாக குறிப்பிட்ட இடத்தின் சுற்றுச்சூழல் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தல் ஆகும். இந்த ஆய்வானது, நீரின் தரம், காற்றின் தரம், நிலத்தைப் பயன்படுத்தும் விதம், சூழல் அமைப்பின் (ecosystem) நிலை இவற்றோடு சேர்த்து ஓரிடத்தின் சமூக மற்றும் கலாசார செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் சார்ந்திருக்கிறது.
அழுத்தம்-நிலை-பதில் கட்டமைப்பு
[தொகு]மனிதனின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலின் பல அம்சங்களைப் பாதிக்கிறது. உதாரணமாக, காடுகளை அழிப்பதால் களையினங்கள் பெருகுகின்றன, வாழிடங்களாக மாற்றப்படுவதால், காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டு கார்பன்டைஆக்சைடு வெளியேற்றம் அதிகமாகிறது.
அழுத்தம்-நிலை-பதில் (Pressure-State-Response) கட்டமைப்பின் (PSR) கீழ் அழுத்தம் என்பது கீழ்வரும் பாதிப்புகளைக் குறிக்கும்: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அல்லது நிலத்திலிருந்து நதிக்கு வந்து சேரும் கழிவுகள், காடுகளை அழிக்கிறது. மீனவர்கள் அதிகமாக நீர் வாழ்விலங்குகளைப் பிடிப்பது மற்றும் வேட்டையாடுபவர்கள் அதிக அளவில் விலங்குகளை வேட்டையாடுவது போன்றவற்றால் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிப்படைகிறது.[1]
இந்தக் கட்டமைப்பில் மனிதன் சுற்றுச்சூழலுக்கு கொடுக்கும் நெருக்கடியே அழுத்தமாகக் கொள்ளப்பப்படுகிகிறது. இயற்கை சீற்றங்கள், தீவிர வானிலை மாற்றங்கள் (அதாவது புவி வெப்பமடைதல்) போன்றவைகளுக்கும் மனித நடவடிக்கைகளே காரணங்களாகக் கருதப்படுகின்றன.
சுற்றுச்சூழலில் நிலை என்பது தற்போதுள்ள சுற்றுச்சூழலின் நிலைப்பாடாகும். வளிமண்டலம், காற்று, நீர், நிலம் மற்றும் உயிரினங்கள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை அளவீடு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலின் இன்றைய நிலையை மதிப்பீடு செய்யலாம்.[1] ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (European Environment Agency), அழுத்தம்-நிலை-பதில் கட்டமைப்புடன் சுற்றுச்சூழலை வளர்க்கும் சக்தியையும் மற்றும் அதனின் தாக்கங்களையும் சேர்த்து ஆய்வு செய்கிறது.
சுற்றுச்சூழல் நிலையின் அறிக்கை
[தொகு]நியுசிலாந்து [2] மற்றும் ஆஸ்திரேலியா .[3] போன்ற நாடுகள் சுற்றுச்சூழல் நிலையின் அறிக்கையைத் தயாரிக்கின்றன. நியூசிலாந்து முழுவதுக்குமான சுற்றுச்சூழல் நிலை அறிக்கை, பிராந்திய அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Box 1.2: The Pressure-State-Response framework பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம், Chapter One: Introduction, The State of New Zealand’s Environment 1997, Report Ref. ME612, Ministry for the Environment, Wellington, New Zealand.
- ↑ The State of New Zealand’s Environment 1997 பரணிடப்பட்டது 2009-10-09 at the வந்தவழி இயந்திரம், Report Ref. ME612, Ministry for the Environment, Wellington, New Zealand.
- ↑ State of the Environment 2006 (SoE 2006), On line web page, Portable document format, Australian Government Department of the Environment, Water, Heritage and the Arts, Canberra, Australia.