உள்ளடக்கத்துக்குச் செல்

டபிள்யூ. ஜி. கிரேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டப்ளியூ. ஜி. கிரேஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டப்ளியூ. ஜி. கிரேஸ்
பட்டப்பெயர்டபிள்யூ ஜி, தெ டாக்டர், தெ சாம்பியன், தெ ஒல்ட் மேன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 24)செப்டம்பர் 6 1880 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 1 1899 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 22 878
ஓட்டங்கள் 1,098 54,896
மட்டையாட்ட சராசரி 32.29 39.55
100கள்/50கள் 2/5 126/254
அதியுயர் ஓட்டம் 170 344
வீசிய பந்துகள் 666 126,157
வீழ்த்தல்கள் 9 2,864+12
பந்துவீச்சு சராசரி 26.22 17.99
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 246
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 66
சிறந்த பந்துவீச்சு 2/12 10/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
39/– 887/5
மூலம்: Rae, pp.495–496: see also Footnote[a]

வில்லியம் கில்பர்ட் டபிள்யூ. ஜி. கிரேஸ் (William Gilbert "W. G." Grace, சூலை 18, 1848[1] - அக்டோபர் 23, 1915) என்பவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார்.[1] இவர் துடுப்பாட்ட வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.[2] மேலும் துடுப்பாட்டத்தின் வரலாற்றில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் டபிள்யூ.ஜி என பரவலாக அறியப்படுகிறார். இவர் 1865 முதல் 1908 வரையிலான காலகட்டங்களில் 44 சர்வதேச முதல்தர போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி, க்லொசெஸ்டெர்ஷைர் மாகாண உள்ளூர் அணி, எம் சி சி, யு எஸ் இ இ ஆகிய அணிகளின் தலைவராக இருந்துள்ளார்.[2]

இவர் வலது கை மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத்துறையராக விளங்கினார். மட்டையாளர், பந்துவீச்சாளர், களவீரரகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் இவர் ஒரு சிறப்பான மட்டையாளராகவே அறியப்படுகிறார். சில புதுமையான மட்டை நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் துவக்கவீரராக களம் இறங்கினார்.[2]

இவர் ஒரு துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.[2] இவரின் மூத்த சகோதரர் ஈ. எம். கிரேஸ் மற்றும் இளைய சகோதரர் ஃபிரெட் கிரேஸ் ஆகியோர் 1880 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடினர்.[2] டபிள்யூ. ஜி. கிரேஸ், ஈ. எம். கிரேஸ் மற்றும் ஃபிரெட் கிரேஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினர். மூன்று சகோதரர்கள் இணைந்து விளையாடுவது அதுவே முதல் முறையாகும். கிரேஸ் துடுப்பாட்டம் தவிர பிற விளையாட்டுகளிலும் பங்கேற்றார்[2]. 440 கெஜம் தடை தாண்டும் ஓட்டத்தில் வாகையாளர் ஆவார். மேலும் வாண்டரர்ஸ் காற்பந்துச் சங்கத்திற்காக விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு சுருள்வு (விளையாட்டு),குழிப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பிறப்பு

[தொகு]

டபிள்யூ.ஜி. கிரேஸ் சூலை 18, 1848 [2] இல் டவுனெண்ட், பிரிஸ்டலில் பிறந்தார். ஆகஸ்டு 8 இல் உள்ளூர் கிறித்தவத் தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்றார். கில்பெர்ட் என்ற பெயரால் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவரின் தாயார் மட்டும் இவரை வில்லீ என அழைத்தார். எனவே தான் இவர் டபிள்யூ (வில்லீ) ஜி (கில்பர்ட்) என அழைக்கப்படுகிறார். இவருடைய தந்தை ஹென்றி மில்ஸ் கிரேஸ் மற்றும் தாய் மார்த்தா ஆவர். இவர்கள் இருவரும் நவம்பர் 3, 1831 இல் பிரிஸ்டலில் திருமணம் புரிந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். டபிள்யூ.ஜி. கிரேஸ் எட்டாவது குழந்தை ஆவார். இவருக்கு ஈ. எம் கிரேஸ் உட்பட மூன்று மூத்த சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். இவரின் இளைய சகோதரர் (ஒன்பதாவது குழந்தை) ஃபிரெட் கிரேஸ் 1850 ஆம் ஆண்டு பிறந்தார்.[3]

கல்வி

[தொகு]

கிரேஸ் முதலில் டவுனெண்டில் உள்ள மிஸ் ட்ராட்மன் பள்ளியில் பயின்றார். பின் விண்டர்போர்னிலுள்ள திரு கர்டிஸ் பள்ளியில் பயின்றார். இவரின் பதினான்கு வயது வரையில் திரு மாப்ளஸ் என்பவர் நடத்திய ரிட்ஜ்வே எனும் நாள்முறைப் பள்ளியில் பயின்றார். இவரின் பள்ளிக்கூட ஆசிரியரான டேவிட் பர்னார்ட் , கிரேஸின் தங்கை அலைசை திருமனம் புரிந்தார். 1863 இல் தீவிர நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டார். நோய்த்தாக்குதலினால் இவர் முழு உயரத்தினை 6 அடி 2அங்குலத்தை அடைந்தார். எனவே இவர் வீட்டில் இருந்தபடியே ரெவெரென்ட் ஜான் டன் எனும் போதகரிடம் கல்வி பயின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "W.G. Grace Profile - ICC Ranking, Age, Career Info & Stats", Cricbuzz (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-23
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "W. G. Grace", International Cricket Wiki (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-23
  3. "W.G. Grace", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-04-22

வெளி இணைப்புகள்

[தொகு]