டாகாச்சோ
Appearance
டாகாச்சோ சோரிசூவுடன், செசினா மேலெ | |
தொடங்கிய இடம் | பெரு |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | வறுக்கப்பட்ட வாழைப்பழம் |
டாகாச்சோ (Tacacho) என்பது பெரு நாட்டின் பாரம்பரிய உணவாகும். இது பொதுவாகக் காலை உணவில் பரிமாறப்படுகிறது. அமேசான் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு பூர்வீக வாசிகள் வாழைப்பழங்களை வேகவைத்து அல்லது சுட்டு, தோலினை உரித்து, பின்னர் அவற்றை ஒரு பெரிய மர உரலில் இட்டுப் பிசைந்து விடுகிறார்கள். பிசைந்ததும், வாழைப்பழங்களுடன் பன்றிக்கொழுப்பு, உப்பு மற்றும் சிறிய பன்றி இறைச்சி துண்டுகளுடன் காய்கறிகள் சேர்த்து மற்றும் சோரிசோவுடன் பரிமாறப்படுகிறது.[1]
தோற்றம்
[தொகு]இந்த உணவு மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. அங்கு இது புபு என்று அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்கத் தாக்கங்களைக் கொண்ட கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் வாழைப்பழங்கள் வேகவைக்கப்பட்டு அல்லது வறுத்தெடுக்கப்பட்டுப் பூண்டு சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tacacho con cecina[தொடர்பிழந்த இணைப்பு] About.com