டிராக்கோமா
டிராக்கோமா Trachoma | |
---|---|
இமை உள் நோக்கல் மற்றும் டிரக்கோமாவால் ஏற்படும் இமைமயிர் உறுத்தல் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases, ophthalmologist |
ஐ.சி.டி.-10 | A71. |
ஐ.சி.டி.-9 | 076 |
நோய்களின் தரவுத்தளம் | 29100 |
மெரிசின்பிளசு | 001486 |
ஈமெடிசின் | oph/118 |
பேசியண்ட் ஐ.இ | டிராக்கோமா |
ம.பா.த | D014141 |
டிராக்கோமா, (Trachoma), வேறு பெயர்கள்: நுண்மணி இமை படல அழற்சி (granular conjunctivitis), எகிபத்திய கண்ணழற்சி (Egyptian ophthalmia),[1] மற்றும் பார்வையைப் போக்கும் டிராக்கோமா (blinding trachoma) என்பது கிளமிடியா டிரக்கமாட்டிஸ் எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும்.[2] இந்த நோய்த்தொற்று இமைகளைச் சொர சொர என மாற்றுகிறது, இமைகளின் உட்புறத்தை கரடு முரடாக்குகிறது. இப்படி கரடு முரடாவது கண்களில் வலியை ஏற்படுத்தும், கருவிழிப்படலத்தின் வெளிப்புறத்தில் உடைவு ஏற்படலாம் அல்லது குருட்டுத் தன்மை கூட ஏற்படலாம்.[2]
காரணிகள்
[தொகு]இந்த நோயால் பாதிக்கபட்டவரின் கண்கள் அல்லது மூக்கு போன்ற உறுப்புகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு ஏற்பட்டால் இந்த நோய் தொற்றுக்கிருமி பரவ வாய்ப்புண்டு.[2] மறைமுக தொடர்பு என்பதில் பாதிக்கப்பட்ட நபர் அவரது கண்களையோ மூக்கையோ துடைக்கப் பயன்படுத்திய துணிகளும் ஈக்களும் அடங்கும்..[2] பல ஆண்டுகளாக இந்த தொற்று இருந்தால் மட்டுமே இமைகளில் வடு ஏற்படும். அப்பொழுது இமை மயிர்கள் கண்ணுடன் உரச தொடங்கும்.[2] இந்த நோய் தொற்று பெரியவர்களை விட அதிகமாக சிறுவர்களால் ஏற்படுகிறது.[2] சுற்றுப்புற தூய்மை குறைவு, நெரிசலான வாழ்விடங்கள், சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்றவை நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும்.[2]
தடுப்பு மற்றும் சிகிச்சை
[தொகு]இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் முக்கியமானவை சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வது மற்றும் நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு நுண்ணியர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிப்பதும் தான்.[2] இந்த நோய் பொதுவாகத் தாக்கும் மக்கள் அனைவருக்குமே ஒரே நேரத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.[3] கழுவுதல் என்பது போதுமானது அல்ல, இருந்தாலும் இதர நடவடிக்கைகளுடன் சேர்த்து செய்தால் பலனளிக்கலாம்.[4] சிகிச்சை முறை தேர்வுகளில் வாய் வழியாக அசித்திரோமைசின் அல்லது வெளிப்புற பூச்சு மருந்தாக டெட்ராசைக்ளின் பயன்படுத்தப்படுகிறது.[3] அசித்திரோமைசின் மாத்திரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது ஏனெனில் அது ஒரு வேளை மட்டும் உட்கொண்டால் போதுமானது.[5] கண்ணிமைகளில் வடு ஏற்பட்டுவிட்டால் இமைமயிர்களின் ஒழுங்கில்லா நிலையை சரி செய்யவும் குருட்டுதன்மையை தவிர்க்கவும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.[2]
நோய்தொற்று இயல்
[தொகு]உலகளவில் இத்தொற்று 80 மில்ல்யன் மக்களிடம் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது.[6] சில இடங்களில் இந்த நோய்த்தொற்று 60-90 விழுக்காடு வரை குழந்தைகளையே பாதித்துள்ளது. அவர்களைத் தவிர்த்து ஆண்களை விட பெண்களுக்கே இந்த தொற்று அதிகமாக உள்ளது, காரணம் குழந்தைகளிடம் அவர்களுக்குள்ள நெருக்கம்.[2] சுமார் 2.2 மில்லியன் மக்களிடம் உள்ள பார்வைக் குறைவுக்கு காரணம் இந்த நோய்த்தொற்று தான், அதில் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது.[2] இந்த நோய் பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 53 நாடுகளை சேர்ந்த 230 மில்லியன் மக்களை தாக்கும் அபாயத்திலுள்ளது.[2] இது ஆண்டுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.[2] புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்று இந்த நோய்கள் வகைப்படுத்தப்ட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swanner, Yann A. Meunier ; with contributions from Michael Hole, Takudzwa Shumba & B.J. (2014). Tropical diseases : a practical guide for medical practitioners and students. Oxford: Oxford University Press, USA. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199997909.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 "Blinding Trachoma Fact sheet N°382". World Health Organization. November 2013. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
- ↑ 3.0 3.1 Evans JR1, Solomon AW (March 2011). "Antibiotics for trachoma". Cochrane Database Syst Rev 16 (3): CD001860. doi:10.1002/14651858.CD001860.pub3. பப்மெட்:21412875.
- ↑ Ejere, HO; Alhassan, MB; Rabiu, M (Apr 18, 2012). "Face washing promotion for preventing active trachoma.". The Cochrane database of systematic reviews 4: CD003659. doi:10.1002/14651858.CD003659.pub3. பப்மெட்:22513915.
- ↑ Mariotti SP (November 2004). "New steps toward eliminating blinding trachoma". N. Engl. J. Med. 351 (19): 2004–7. doi:10.1056/NEJMe048205. பப்மெட்:15525727. http://content.nejm.org/cgi/pmidlookup?view=short&pmid=15525727&promo=ONFLNS19.
- ↑ 6.0 6.1 Fenwick, A (Mar 2012). "The global burden of neglected tropical diseases.". Public health 126 (3): 233–6. doi:10.1016/j.puhe.2011.11.015. பப்மெட்:22325616.