தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009
Appearance
| |||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் தொகுதி மறுசீரமப்புக்கு பின் நடந்த முதல் தேர்தல் ஆகும். திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்
[தொகு]- 2009ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. 2004 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழகத்தின் தலைமை கட்சியான திமுக-காங்கிரஸ் உடன் மதிமுக, பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐந்தாண்டுகள் ஆட்சி நீடித்தது. ஆனால் தமிழகத்தில் அக்கூட்டணியிலிருந்து சிறிய கட்சிகள் மட்டும் வெளியேறிவிட்டன.
கூட்டணி கட்சிகள்
[தொகு]- 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடனான தொகுதி உடன்பாட்டு பிரச்சனையால் மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது. பின்பு மதிமுக காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 2007 ஆம் ஆண்டு ஈழதமிழற்கள் விவகாரத்தில் எதிராக செயல்பட்டதால் காங்கிரஸ்க்கு அளித்து வந்த ஆதரவை வைகோ விலக்கிக் கொண்டார்.
- 2008ல் இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினர். 2009ல் தேர்தல் தேதி நெருங்கியபின் பாமக வெளியேறி இக்கட்சிகள் எதிர்கட்சியான அதிமுக தலைமையிலான மூன்றாவது முன்னணியில் இணைந்தன.
- திமுக-காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே இடம் பெற்று இருந்தது.
- மேலும் அதிமுக-இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தது.
- நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்து போட்டியிட்டது.
- பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, சுப்ரமணியன் சாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஏழு சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
வ. எண். | கட்சி |
---|---|
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி | |
1. | திமுக |
2. | காங்கிரஸ் கட்சி |
3. | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி |
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி | |
1. | அதிமுக |
2. | இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
3. | மதிமுக |
4. | பாமக |
5. | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
தேசிய ஜனநாயக கூட்டணி | |
1. | பாரதிய ஜனதா கட்சி |
2. | சமத்துவ மக்கள் கட்சி |
3. | நாடாளும் மக்கள் கட்சி |
4. | ஜனதா கட்சி |
5. | ஐக்கிய ஜனதா தளம் |
தனித்துப் போட்டி | |
1. | தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் |
தேர்தல் வரலாறு
[தொகு]- நான்காம் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்ததால் ஈழப் போர் இத்தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்தது.
- இந்த நான்காம் ஈழப்போர் ஆனது இந்தியாவின் மத்திய அரசாங்கமான காங்கிரஸ் துண்டுதலின் பெயரால் தான் அக்கட்சியின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலை படையை ஏவி கொன்ற விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், ஈழதமிழற்களையும் இலங்கை அரசாங்கத்தின் மூலமாக சிங்கள ராணுவத்தின் உதவியுடன் காங்கிரஸ் அந்த இன அழிப்பு வஞ்சத்தை தீர்த்து கொண்டதால்.
- இந்தியாவிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பலமான எதிர்ப்புகள் இருந்துவந்ததையடுத்து,
- தமிழ்நாட்டில் அப்போது ஆளும் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திமுக கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் மைனாரிட்டியில் வெற்றி பெற்று இருந்ததாலும். அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் இன அழிப்பு சம்பவத்தை காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுக அணியில் சேர்ந்து விட்டதால்.
- திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் ஈழப்போரில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை மறைமுகமாக நடத்தும் காங்கிரஸ் கட்சியின் செயலை கண்டிக்காமல் கூட்டணியில் இருந்து விலகததற்க்கு காரணம் காங்கிரஸ் பெரும்பான்மையின் உதவியுடன் திமுக ஆட்சி செய்து வந்ததாலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து விட்டால் பெரும்பான்மை இல்லாமல் தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தால் திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணியை தொடர்ந்தது.
- இதையடுத்து எதிர்க்கட்சி அதிமுகவில் ஜெயலலிதாவுடன் பலமான சிறிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்த போதிலும் 12 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இத்தேர்தல் பிரச்சாரமாக மத்திய காங்கிரஸ் கட்சியின் இன அழிப்பு செயலை கண்டித்து வீர பூமியா ஈழ பூமியா என்று இலங்கை வாழ் ஈழதமிழற்களுக்கு ஆதரவாக பேசினார்.
- ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே 28 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடித்தது இந்திய மக்களிடையேவும், தமிழக மக்களிடையேவும் பெரும் சர்ச்சைக்குரிய வெற்றியாக இன்று வரை இருந்துவருகிறது.
வேட்பாளர்கள்
[தொகு]வ. எண். | தொகுதி | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | தேமுதிக கூட்டணி | பாஜக கூட்டணி |
---|---|---|---|---|---|
1. | திருவள்ளூர் | காயத்ரி (திமுக) | வேணுகோபால் (அதிமுக) | சுரேஷ் (தேமுதிக) | சுதர்சன் (ஜனதா தளம்) |
2. | வட சென்னை | டி. கே. எஸ். இளங்கோவன் (திமுக) | டி. பாண்டியன் (கம்யூனிஸ்ட்) | யுவராஜ்.வி (தேமுதிக) | தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) |
3. | தென் சென்னை | ஆர். எஸ். பாரதி (திமுக) | சி. ராஜேந்திரன் (அதிமுக) | வி. கோபிநாத் (தேமுதிக) | லா. கணேசன் (பாஜக) |
4. | மத்திய சென்னை | தயாநிதி மாறன் (திமுக) | முகமது அலி ஜின்னா (அதிமுக) | வி. வி. ராமகிருஷ்ணன் (தேமுதிக) | |
5. | பெரும்புதூர் | டி. ஆர். பாலு (திமுக) | ஏ. கே. மூர்த்தி (பாமக) | எம். அருண் சுப்பிரமணியம் (தேமுதிக) | |
6. | |||||
7. | |||||
8. | |||||
9. | |||||
10. |
முடிவுகள்
[தொகு]திமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
திமுக | 17 | அதிமுக | 9 | தேமுதிக | 0 |
காங்கிரசு | 8 | மதிமுக | 1 | பாஜக | 0 |
விடுதலைச் சிறுத்தைகள் | 1 | சிபிஐ | 1 | ||
முஸ்லீம் லீக் | 1 | சிபிஎம் | 1 | ||
பாமக | 0 | ||||
மொத்தம் (2009) | 27 | மொத்தம் (2009) | 12 | மொத்தம் (2009) | 0 |
மொத்தம் (2004) | 39 | மொத்தம் (2004) | 0 | மொத்தம் (2004) | 0 |
தமிழக அமைச்சர்கள்
[தொகு]இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
ஆய அமைச்சர்கள்
[தொகு]அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ப. சிதம்பரம் | காங்கிரசு | சிவகங்கை | உள்துறை |
மு. க. அழகிரி | திமுக | மதுரை | உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் |
தயாநிதி மாறன் | திமுக | மத்திய சென்னை | நெசவு |
ஆ. ராசா | திமுக | நீலகிரி | தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் |
ஜி. கே. வாசன் | காங்கிரசு | மாநிலங்களவை உறுப்பினர் | கப்பல் போக்குவரத்து |
இணை அமைச்சர்கள்
[தொகு]அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | திமுக | தஞ்சாவூர் | நிதி |
துரைசாமி நெப்போலியன் | திமுக | பெரம்பலூர் | சமூகநீதி |
எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | அரக்கோணம் | தகவல் மற்றும் தொலைதொடர்பு |