தாவண்கரே
தாவங்கரே | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம்: தாவங்கரே, கருநாடகம்
| |||||||
ஆள்கூறு | 14°28′00″N 75°55′27″E / 14.4666°N 75.9242°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
மாவட்டம் | தாவண்கரே மாவட்டம் | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி.எஸ்.வஸ்த்ராட் IAS | ||||||
மக்களவைத் தொகுதி | தாவங்கரே | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 70 சதுர கிலோமீட்டர்கள் (27 sq mi) | ||||||
குறியீடுகள்
|
தாவண்கரே அல்லது தாவணகரே (Davangere, கன்னடம்: ದಾವಣಗೆರೆ) இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள ஓர் மாநகரமாகும். இது தாவண்கரே மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடமாக விளங்குகிறது. மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 265 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. 1997ஆம் ஆண்டில்தான் தாவண்கரே மாவட்டம் தனியாக உருவானது; முன்னதாக இது சித்திரதுர்கா மாவட்டத்தின் அங்கமாக இருந்தது.
பெயருக்கான வரலாறு
[தொகு]வரலாற்றுச் சான்று எதுவும் இல்லாத நிலையில் உள்ளூர் செவிவழிச் செய்தியாக நம்பப்படுவது: நெடுந்தொலைவு குதிரைப்பயணம் செய்த சாளுக்கியர்கள் தங்கள் களைப்பின் (தாணிவு கலேயுவா) காரணமாக இங்கு தங்கியதாகவும் தாகம் தணிக்க ஓர் ஏரி (கெரே) வெட்டியதாகவும் கூறப்படுகிறது. எனவே தாணிவ கெரே என்பதே திரிந்து தேவன் கிரி என்றும் மேலும் திரிந்து தாவணகரே என்றானதாகவும் கூறப்படுகிறது.
வரலாறு
[தொகு]துவக்கத்தில் பெட்டூரின் புறநகராக சிற்றூராக தாவணகரே இருந்தது. ஹைதர் அலி இச்சிற்றூரை தானமாக மராத்தா தலைவர் அப்போஜி ராவ் என்பவருக்குக் கொடுத்தார். பல வணிகர்களை இங்கு வரவேற்ற அப்போஜி ராவ் வாரிசுகளின்றி இறந்தபோதும் அவரது முயற்சி வெற்றியடைந்தது. திப்பு சுல்தான் தனது ஆட்சிக்காலத்தில் இந்த நகரின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு ஐரோப்பிய நிறுவனம் ஒன்று பருத்தியாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது. இது தாவணகரேயில் பல பருத்தி ஆலைகள் நிறுவப்படவும் தாவண்கிரேயின் சுற்றுப்புற கருப்பு நிலங்களில் பருத்திப் பயிரிடவும் காரணமாக அமைந்தது. இவற்றில் தாவண்கரே காட்டன் மில்ஸ் புகழ்பெற்றது. 1870களிலேயே தாவண்கரே நகராட்சியாக விளங்கியது.[1] இந்திய அரசிதழின்படி (1911) 1901ஆம் ஆண்டில் முடிந்த பத்தாண்டுகளில் வரவும் செலவும் சராசரியாக ரூ. 14,200 மற்றும் ரூ 12,600 ஆக இருந்தது.[1]