உள்ளடக்கத்துக்குச் செல்

தேகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகு
대구
大邱
பெருநகர நகராட்சி
தெகு பெருநகரப் பகுதி
மேலிருந்து வலச்சுற்றாக: தேகுவின் நகரக்காட்சி, சியோமுன் சந்தை, தேகு நகர மன்றம், குயுங்பூக் தேசியப் பல்கலைக்கழகம், தோங்வாசா கோவில்
மேலிருந்து வலச்சுற்றாக: தேகுவின் நகரக்காட்சி, சியோமுன் சந்தை, தேகு நகர மன்றம், குயுங்பூக் தேசியப் பல்கலைக்கழகம், தோங்வாசா கோவில்
Map of தென் கொரியாவின் நிலப்படத்தில் தெகுவின் அமைவிடம்
Map of தென் கொரியாவின் நிலப்படத்தில் தெகுவின் அமைவிடம்
Districts7
அரசு
 • நகரத்தந்தைகுவொன் யங்-ஜின் (권영진)
பரப்பளவு
 • மொத்தம்884.15 km2 (341.37 sq mi)
மக்கள்தொகை
 (2009)[1]
 • மொத்தம்25,12,604
 • அடர்த்தி2,842/km2 (7,360/sq mi)
மலர்மாக்னோலியா
மரம்பிர்
பறவைஅசிபித்ரிடே
இணையதளம்daegu.go.kr (ஆங்கிலம்)

தேகு (Daegu, 대구, 大邱, மொழியாக்கம் 'பெரிய குன்று') தென் கொரியாவின் சியோல், புசான், இஞ்சியோன் நகரங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நகரமும் புதுப்பாங்கு நகரமும் ஆகும். கெயோங்சாங் மாகாணத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இந்த நகரத்தில் 25 லட்சம் பேர் வாழ்கின்றனர்.

தென்கொரியாவின் கரையோரத்திலிருந்து சுமார் 80 கிமீ தென்கிழக்கில் கியோமோ (Geumho) ஆற்றின் கரையில் தெகு அமைந்துள்ளது. இந்நகரம் அமைந்துள்ள தேகு வடிநிலம் இயோங்நாம் வட்டார சமவெளியில் அமைந்துள்ளது. தொன்மைக்காலங்களில் ஜின்ஹன் என்ற நாடு இங்கு இருந்தது. பின்னர் தேகு சில்லா இராச்சியத்தின் அங்கமாக இருந்தது. இந்த இராச்சியம் தான் கொரியத் தீபகற்பத்தை ஒன்றிணைத்தது. ஜோசியோன் வம்சாவளி காலத்தில் இந்த நகரம் நாட்டின் எட்டு பாரம்பரிய மாகாணங்களில் ஒன்றான கெயோங்சாங்-தொவின் தலைநகரமாக இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. National Statistical Office (2009). SELITEM=0 "행정구역(동읍면)별 인구, 가구 및 주택". பார்க்கப்பட்ட நாள் 2008-12-31. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேகு&oldid=3217201" இலிருந்து மீள்விக்கப்பட்டது