த பர்த் ஆஃப் எ நேஷன்
த பர்த் ஆஃப் எ நேஷன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | டி. டபிள்யூ. கிரிஃபித் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ஜோசப் கார்ல் பிரெய்ல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பில்லி பிட்சர் |
படத்தொகுப்பு | டி. டபிள்யூ. கிரிஃபித் |
கலையகம் | டேவிட் டபிள்யூ. கிரிஃபித் கார்ப். |
விநியோகம் | எபோக் புரொடக்ஷன் கோ. |
வெளியீடு | பெப்ரவரி 8, 1915 |
ஓட்டம் | 12 சுருள்கள் 133–193 நிமிடங்கள்[note 1][2] |
நாடு | அமெரிக்கா |
மொழி |
|
ஆக்கச்செலவு | $100,000+ |
மொத்த வருவாய் | $50–100 மில்லியன் |
த பர்த் ஆஃப் எ நேஷன் முதலில் தி கிளான்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டது, (The Birth of a Nation, originally called The Clansman[3]) இது 1915 ஆம் ஆண்டு டி. டபிள்யூ. கிரிஃபித் இயக்கி, லிலியன் கிஷ் நடித்த அமெரிக்க மௌன காவிய நாடகத் திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையானது தாமஸ் டிக்சன் ஜூனியரின் 1905 புதினம் மற்றும் தி கிளான்ஸ்மேன் என்ற நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டது. திரைக்கதையை ஃபிராங்க் ஈ. உட்சுடன் இணைந்து எழுதிய க்ரிஃபித், ஹாரி ஐட்கனுடன் இணைந்து படத்தைத் தயாரித்தார்.
த பர்த் ஆஃப் எ நேஷன் திரைப்பட வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும்,[4][5] அதன் தொழில்நுட்ப திறமைக்காக பாராட்டப்பட்டது.[6] இதுவே 12-ரீல்களைக் கொண்ட அமெரிக்காவின் பாகங்கள் அல்லாத முதல் நெடிய திரைப்படமாகும்.[7] இதன் கதை, பகுதி புனைகதையாகவும், பகுதி வரலாறாகாவும் உள்ளது. ஜான் வில்க்ஸ் பூத் ஆபிரகாம் லிங்கனை படுகொலை செய்தல், உள்நாட்டுப் போர், நாடு மறுசீரமைப்பு செய்யப்படும் காலங்கள் என பல ஆண்டுகள் விரியும் காலக்கட்டத்தில் இரண்டு குடும்பங்களின் உறவை இப்படத்தின் கதை விவரிக்கிறது. இப்படம் முதலில் ஒரு இடைவேளை கொண்டதாக இரண்டு பகுதிகளாகக் காட்டப்பட்டது. மேலும் இது சேர்ந்திசை இசைக்கபட்ட முதல் அமெரிக்க தயாரிப்புத் திரைப்படம் ஆகும். இது குளோசப் உள்ளிட்ட காட்சியமைப்புகளுக்கு முன்னோடியாக இருந்தது. மேலும் இது நூற்றுக்கணக்கானவர்களைக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளது போல தோற்றமளிக்கும் வகையில் கவனமாக எடுக்கபட்ட போர்க் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது.[8] வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். அங்கு சனாதிபதி உட்ரோ வில்சன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களால் பார்க்கபட்டது.
இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே சர்ச்சைக்குள்ளானது. இது "அமெரிக்காவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய படம்"[9]:198 மேலும் "ஹாலிவுட் வரலாற்றில் மிகவும் கண்டிக்கத்தக்க இனவெறித் திரைப்படம்" என்று அழைக்கப்படுகிறது. ஆபிரிக்க அமெரிக்கர்களை இனவெறியுடன் சித்தரித்ததற்காக இந்தப் படம் கண்டிக்கப்பட்டது.[6] இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற கறுப்பின கதாபாத்திரங்களை (அவர்களில் பலர் கருப்பர்களாக வேடமிட்ட வெள்ளை நடிகர்கள்) அறிவற்றவர்களாகவும், வெள்ளைப் பெண்களிடம் பாலியல் ரீதியாக ஆக்ரோஷமானக நடப்பவர்களாகவும் சித்தரித்தது இதில் கு கிளக்சு கிளான் அமைப்பை ஒரு வீர சக்தியாக சித்தரித்தது, இது அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாக்கவும், வெள்ளை பெண்களைப் பாதுகாக்கவும், வெள்ளை மேலாதிக்கத்தை பராமரிக்கவும் அவசியமானதாக சித்தரித்தது.[10][11]
வெளியானவுடன் நாடு முழுவதும் வெள்ளை பார்வையாளர்களிடையே பிரபலமானது. இந்த படத்தின் வெற்றியில் அமெரிக்கா முழுவதும் உள்ள இனப் பாகுபாட்டின் பங்களிப்பும், விளைவும் காரணமாக இருந்தது.[12] கறுப்பின மக்கள் மற்றும் உள்நாட்டுப் போர் வரலாறு குறித்து படத்தில் சித்தரிக்கபட்ட விதத்துக்கு, அமெரிக்கா முழுவதும் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஸ்டன் மற்றும் பிற பகுதிகளில், கறுப்பினத் தலைவர்கள் மற்றும் என்.ஏ.ஏ.சி.பி. இனப் பதட்டங்களைத் தூண்டும், வன்முறையைத் தூண்டும் படம் என்ற அடிப்படையில் இப்படத்தை தடை செய்யப்பட வேண்டும் என்ற பரப்புரையை மேற்கொண்டனர். என்றாலும் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இப்படமானது ஓஹியோ மாநிலத்திலும் சிகாகோ, டென்வர், பிட்ஸ்பர்க், செயின்ட் லூயிஸ், மினியாபோலிஸ் ஆகிய நகரங்களிலும் வெளியிட மறுக்கப்பட்டது.[13]
சர்ச்சைகளுக்கு இடையிலும், த பர்த் ஆஃப் எ நேஷன் நாடு முழுவதும் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது—முந்தைய எந்த இயங்கு படங்களையும் விட மிக அதிகமாக வசூலித்தது-மேலும் இது திரைப்படத் துறை மற்றும் அமெரிக்க கலாச்சாரம் இரண்டையும் ஆழமாக பாதித்தது. பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக வருமானம் ஈட்டிய படங்களில் ஒன்றாகு இது உள்ளது. இது கு க்ளக்ஸ் கிளானின் மறுபிறப்புக்கு ஒரு உத்வேகமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இது வெளியான சில மாதங்களுக்குப் பிறகு அது நடந்தது. 1992 ஆம் ஆண்டில், காங்கிரஸின் நூலகம் இப்படத்தை "கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கருதி, தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[14][15]
மேற்கோள்கள்
[தொகு]தகவல் குறிப்பு
- ↑ Runtime depends on projection speed ranging 16 to 24 frames per second
அடிக்குறிப்பு
- ↑ "D. W. Griffith: Hollywood Independent". Cobbles.com. June 26, 1917. Archived from the original on August 24, 2013. பார்க்கப்பட்ட நாள் July 3, 2013.
- ↑ "The Birth of a Nation (U)". Western Import Co. Ltd. British Board of Film Classification. Archived from the original on March 5, 2016. பார்க்கப்பட்ட நாள் August 20, 2013.
- ↑ "Thomas Dixon Dies, Wrote Clansman". த நியூயார்க் டைம்ஸ்: p. 23. April 4, 1946. https://www.nytimes.com/1946/04/04/archives/thomas-dixon-dies-wrote-clansman-book-was-basis-for-birth-of-a.html.
- ↑ The Birth of a Nation. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் August 1, 2022.
- ↑ "The Birth of a Nation (1915)". filmsite.org. Archived from the original on September 3, 2011.
- ↑ 6.0 6.1 Niderost, Eric (October 2005). "'The Birth of a Nation': When Hollywood Glorified the KKK". HistoryNet. பார்க்கப்பட்ட நாள் June 7, 2021.
- ↑ Hubbert, Julie (2011). Celluloid Symphonies: Texts and Contexts in Film Music History. University of California Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-94743-6.
- ↑ Norton, Mary Beth (2015). A People and a Nation, Volume II: Since 1865, Brief Edition. Cengage Learning. p. 487. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-305-14278-7.
- ↑ Slide, Anthony (2004). American Racist: The Life and Films of Thomas Dixon. University Press of Kentucky. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8131-2328-8. பார்க்கப்பட்ட நாள் September 16, 2018 – via Project MUSE.
- ↑ "MJ Movie Reviews – Birth of a Nation, The (1915) by Dan DeVore". Archived from the original on July 7, 2009.
- ↑ Armstrong, Eric M. (February 26, 2010). "Revered and Reviled: D.W. Griffith's 'The Birth of a Nation'". The Moving Arts Film Journal. Archived from the original on May 29, 2010. பார்க்கப்பட்ட நாள் April 13, 2010.
- ↑ Stand Your Ground: A History of America's Love Affair with Lethal Self-Defense. Beacon Press. 2017. p. 81.
The Birth of a Nation was an instant success across the nation, grossing more than any prior motion picture ... white audiences throughout the nation enjoyed the romantic depiction of the Old South.
- ↑ "Top Ten – Top 10 Banned Films of the 20th century – Top 10 – Top 10 List – Top 10 Banned Movies – Censored Movies – Censored Films". Alternativereel.com. Archived from the original on May 12, 2012. பார்க்கப்பட்ட நாள் July 3, 2013.
- ↑ "Complete National Film Registry Listing". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19.
- ↑ "'The Birth of a Nation' Documents History". The Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 1993-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19.