உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்வாழ் விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்வாழ் விலங்கு ஒன்று

நீர்வாழ் விலங்கு என்பது நீரில் வாழும் விலங்குகளைக் குறிக்கும். இவை முதுகெலும்பியாகவோ அல்லது முதுகெலும்பிலியாகவோ இருக்கும். எனினும் தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலங்களை நீரில் கழிக்கும் விலங்குகளே நீர்வாழ் விலங்காகக் கொள்ளப்படும்.[1] இந்நீர்வாழ் விலங்குகள் நீரில் கரைந்துள்ள ஒக்சிசனை சுவாசிக்கின்றன. மீன்கள் போன்ற ஒரு சில நீர்வாழ் விலங்குகள் சுவாசிப்பதற்காக செவுள் எனும் பிரத்தியேக அங்கத்தைக் கொண்டுள்ளன. ஒரு சில நேரடியாக தோல் மூலமாகவும் சுவாசிக்கின்றன. நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடிய விலங்குகள் ஈரூடகவாழிகள் என அழைக்கப்படுகின்றன. நீர்வாழ் விலங்கு எனும் சொல்லில் பயன்படுத்தப்படும் நீர் எனும் பதம் நன்னீர், கடல்நீர் என இரண்டையுமே குறிக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]