உள்ளடக்கத்துக்குச் செல்

நௌசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நௌசாத் அலி
பத்ம பூசண்
2005இல் நௌசாத் அலி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1919-12-25)25 திசம்பர் 1919
இலக்னோ, ஒன்றிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு5 மே 2006(2006-05-05) (அகவை 86)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை • இந்தியத் திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்சித்தார்கின்னரப்பெட்டிகைம்முரசு இணைபுல்லாங்குழல்கிளாரினெட்அக்கார்டியன்மாண்டலின்
இசைத்துறையில்1940–2005
இணைந்த செயற்பாடுகள்லதா மங்கேஷ்கர், பி. சுசீலா, ஆஷா போஸ்லே, முகமது ரபி, முக்கேஷ், சம்சாத் பேகம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாகித் பதாயுனி, மஜ்ரூ சுல்தான்பூரி, டி. என். மதோக்

நௌசாத் அலி (Naushad Ali) (25 திசம்பர் 1919 - 5 மே 2006) பாலிவுட் இசையமைப்பாளராவார். [1] [2] இவர் இந்தித் திரைப்படத் துறையின் மிகச் சிறந்த மற்றும் முன்னணி இசை இயக்குனர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். திரைப்படங்களில் இந்துஸ்தானி இசையின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதில் இவர் குறிப்பாக அறியப்படுகிறார். [3]

இசை இயக்குனராக இவரது முதல் படம் பிரேம் நகர் 1940 இல் வெளிவந்தது. இவரது இசையில் முதல் வெற்றிப் படம் ரத்தன் (1944), அதைத் தொடர்ந்து 35 வெள்ளி விழாக்கள், 12 தங்க விழாக்கள் மற்றும் 3 வைர விழாப் படங்களை தந்துள்ளார். இந்தி திரையுலகில் இவர் செய்த பங்களிப்புக்காக முறையே 1981 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தாதாசாகெப் பால்கே விருதும், பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது . [4]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

நௌசாத் அலி 25 திசம்பர் 1919 அன்று இலக்னோவில் பிறந்தார். [1] இவரது தந்தை வாகித் அலி ஒரு நீதிமன்ற எழுத்தராக இருந்தார். உஸ்தாத் குர்பத் அலி, உஸ்தாத் யூசுப் அலி, உஸ்தாத் பாபன் சாகெப் போன்றோரின் கீழ் இந்துஸ்தானி இசையைப் படித்தார். இவருக்கு ஆர்மோனியத்தை சரிசெய்யவும் தெரிந்திருந்தது. <[2]

இறப்பு

[தொகு]

நௌசாத் 5 மே 2006 அன்று மும்பையில் தனது 86 வயதில் இருதயக் கோளாறு காரணமாக இறந்தார். [1][2] ஜுஹு முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [5]

நூலியல்

[தொகு]
  • Bharatan, Raju (2014). Naushadnama: The Life and Music of Naushad. Hay House Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381398630.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Profile of Naushad Ali on Encyclopedia Britannica website Retrieved 13 September 2019
  2. 2.0 2.1 2.2 Karan Bali. "Profile and filmography of Naushad". upperstall.com website. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  3. Raju Bharatan (8 May 2006). "Naushad: Composer of the century". rediff.com website. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  4. CHOPRA, SATISH. "The man, his music (Naushad)". The Hindu (newspaper). பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  5. Jaisinghani, Bella (11 February 2010). "Rafi, Madhubala don't rest in peace here". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811035307/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-11/mumbai/28121815_1_ground-islamic-law-new-graves. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naushad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நௌசாத்&oldid=3315491" இலிருந்து மீள்விக்கப்பட்டது