பள்ளி வளாகம்
பள்ளி வளாகம் (school zone) என்பது பள்ளிக்கு அருகில் உள்ள தெருவில் அல்லது சாலை கடக்குமிடத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியைக் குறிக்கிறது. பள்ளி வளாகங்கள் பொதுவாக குறிப்பிட்ட மணிநேரங்களில் வேக வரம்பைக் கொண்டுள்ளன.
அபராதம்
[தொகு]பள்ளி வளாகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் அதிகரிக்கப்படலாம். உதாரணமாக, பல அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்கு அருகில் வேகமாக வாகனம் ஓட்டினால் வழக்கத்தினை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கின்றனர். பள்ளி நேரங்களில் , பள்ளி வளாகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது.
செயல்படும் நேரம்
[தொகு]கலிஃபோர்னியாவில், பள்ளி வளாகங்கள் பொதுவாக "குழந்தைகள் பள்ளியினை விட்டு வெளியில் இருக்கும்போது அல்லது தெருவைக் கடக்கும் போது" மட்டுமே நடைமுறையில் இருக்கும்,[1] அந்த சமயத்தில் பொதுவாக வேக வரம்பு 25கிமீ/ம அல்லது 40கிமீ/ம ஆக இருக்கும். சில சமயங்களில் மாணவர்கள் உள்ளனர் எனும் அடையாளத்துடன் காட்டப்படலாம்.
சில சமயங்களில் பள்ளி விடுமுறை நாட்களிலும் வேகவரம்பு நடைமுறையில் இருக்கலாம். இருப்பினும், சில இடங்களில், பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி வளாகப் பலகைகள் பூட்டி வைக்கப்படும், (படத்தில் இருப்பது போல்) இதனால் வாகன ஓட்டிகள் சாதாரண வேக வரம்புக்கு செல்லலாம்.
பள்ளி வளாகங்களில் பொதுவாக 15கிமீ/ம முதல் 25கிமீ/ம வரை வேக வரம்புகள் இருக்கும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "California Drivers Handbook (section "Around Children")". Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.