உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிசு பரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிசு பரியா
Phyllis Faria
நியமன சட்டமன்ற உறுப்பினர் கோவா சட்டமன்றம்
பதவியில்
சனவரி 1985[1] – நவம்பர் 1989[2]
தலைவர், மபுசா நகராட்சி[3]
பதவியில்
1 திசம்பர் 1973 – 13 திசம்பர் 1974
முன்னையவர்ஜே.பி.கிளமெண்ட் டிசோசா
பின்னவர்ஷியாம்சுந்தர் நியோகி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-04-17)17 ஏப்ரல் 1924
இறப்பு22 பெப்ரவரி 2018(2018-02-22) (அகவை 93)
வேலைஅரசியல்வாதி
விருதுகள்யசதாமினி விருது

பிலிசு பரியா (Phyllis Faria)(1924-2018) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[4] இவர் மபுசா நகரசபையின் தலைவராகவும் பணியாற்றினார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிலிசு பரியா 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி[5] கல்வியாளர்களின் குடும்பத்தில் பிலிசு யோலண்டா வர்ஜீனியா டி சோசாவாக அல்போன்சசு லிகோரி டி சோசா மற்றும் எல்சி பீட்ரைசு மகளாகப் பிறந்தார்.[6][7] பிலிசு ஒரு ஆசிரியர் ஆவார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றினார்.[7] இவர் அன்டோனியோ வாஸ்கோ டி ஃபாரியாவை மணந்தார்.[6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1966ஆம் ஆண்டில், திட்ட அமலாக்கக் குழுவின் (பார்தேசு) தலைவராக பரியா நியமிக்கப்பட்டார்.[5] 1970-ல், இவர் மபுசா நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] மேலும் 1973-ல் குழுவின் முதல் பெண் தலைவரானார்.[3]

சனவரி 1985-ல், பரியா சுலோச்சனா கட்கர் மற்றும் சங்கீதா பரப் ஆகியோருடன் கோவா சட்டமன்ற நியமன உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினராக[4] பதவி வகித்த காலத்தில், இவர் கோவா சட்டமன்றத்தின் நூலகக் குழு மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.[8]

பிலிசு பரியா வடக்கு கோவா மகளிர் காங்கிரசு தலைவராகவும் இருந்தார்.[5] 1990-ல், பரியா கோவா கைவினைப் பொருட்கள் கிராமப்புற மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் பெண் தலைவரானார். சிறார் நல வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். பாரியா சஞ்சய் சிறப்புக் கல்வி மையத்தின் துணைத் தலைவராகவும், கோவா பால் பவனின் இயக்குநராகவும் இருந்தார். கோவாவின் பர்ராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[5]

விருதுகள்

[தொகு]

பிலிசு பரியா 2002-ல் கோவா அரசால் யஷாதாமினி புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[7] 9 சனவரி 2014 அன்று கோவா சட்டப் பேரவையின் பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் பாராட்டு விழாவில் பரியா பாராட்டப்பட்டார்.[9]

இறப்பு

[தொகு]

பிலிசு பரியா 22 பிப்ரவரி 2018 அன்று கோவா மருத்துவக் கல்லூரியில் சிறிது கால நோய்க்குப்பின்னர் இறந்தார்.[6][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (PDF). 24 May 2018 https://web.archive.org/web/20180524062817/http://goaprintingpress.gov.in/downloads/8485/8485-41-SII-EOG-5.pdf. Archived from the original (PDF) on 2018-05-24. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. 3.0 3.1 3.2 "ABOUT US – Mapusa Municipal Council". 7 March 2018. Archived from the original on 2018-03-07.
  4. 4.0 4.1 "The Goan EveryDay: Former MLA Faria passes away; last rites tomorrow". 7 March 2018. Archived from the original on 2018-03-07.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Phyllis Faria: Former MLA Phyllis Faria passes away - Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 March 2019. Archived from the original on 4 March 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  6. 6.0 6.1 6.2 . 24 May 2018 https://web.archive.org/web/20180524055928/https://www.heraldgoa.in/uploads/obituary/16316_obighjg.jpg. Archived from the original on 2018-05-24. {{cite web}}: Missing or empty |title= (help)
  7. 7.0 7.1 7.2 "Domnic Fernandes Anjuna Goa: THE SACRED HEART OF JESUS HIGH SCHOOLS AND THEIR FOUNDERS - Part 2". 24 May 2018. Archived from the original on 2018-05-24.
  8. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 24 May 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "LS Speaker chief guest for Goa assembly jubilee". oHeraldo. Archived from the original on 2023-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  10. "People pay last respects to former Mapusa MLA Phyllis Faria; funeral today". oHeraldo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிசு_பரியா&oldid=4110216" இலிருந்து மீள்விக்கப்பட்டது