புளும்பொன்டின்
புளும்பொன்டின்
மாங்கவுங் | |
---|---|
அடைபெயர்(கள்): ரோசாக்களின் நகரம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாநிலம் | விடுதலை இராச்சியம் (ஃப்ரீ ஸ்டேட்) |
நகராட்சி | மாங்கவுங் |
நகரம் | 1846[1] |
பரப்பளவு | |
• நகரம் | 236.17 km2 (91.19 sq mi) |
• மாநகரம் | 6,283.99 km2 (2,426.26 sq mi) |
ஏற்றம் | 1,395 m (4,577 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,56,185 |
• பெருநகர் | 7,47,431 |
• பெருநகர் அடர்த்தி | 119/km2 (310/sq mi) |
இடக் குறியீடு | 051 |
புளும்பொன்டின் (Bloemfontein, ஆபிரிக்கானா, டச்சு மொழியில் "மலர்களின் ஊற்று" அல்லது "மலரும் ஊற்று") தென்னாப்பிரிக்காவின் மாநிலம் விடுதலை இராச்சியத்தின் தலைநகரமாகும்; தவிரவும் தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றாகும் -- தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தலைநகரமாகும்; மற்ற இரு தலைநகரங்கள் சட்டப் பேரவை உள்ள கேப் டவுன் மற்றும் நிர்வாகத் தலைநகரமான பிரிட்டோரியா ஆகும்.
புளும்பொன்டினில் உரோசாக்கள் மிகுதியாக விளைவதாலும் ஆண்டுதோறும் இங்கு உரோசா விழா நடப்பதாலும் இந்நகரம் பரவலாகவும் கவித்துவமாகவும் "உரோசாக்களின் நகரம்" என அறியப்படுகின்றது.[3][4] சோத்தோ மொழியில் இந்நகரம் மாங்கவுங் எனப்படுகின்றது; இதற்கு "சிவிங்கிப்புலிகளின் இடம்" எனப் பொருள்படும். 2011இலிருந்து மாங்கவுங் பெருநகராட்சியின் பகுதியாக புளும்பொன்டின் உள்ளது.
புளும்பொன்டின் 29°06′S 26°13′E / 29.100°S 26.217°Eஆட்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 1,395 m (4,577 அடி) உயரத்தில் புல்வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 369,568 ஆகவும், மாங்கவுங் நகராட்சியின் மக்கள்தொகை 645,455 ஆகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]புளும்பொன்டின் எச். டக்ளசு வார்டன் என்பவரால் தளபதி 1846இல் நிறுவப்பட்டது. இது ஒரு படைத்துறைக் கோட்டையாகவும் வாழுமிடமாகவும் உருவாக்கப்பட்டது. 1848–54 காலத்து பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்த ஆரஞ்சு ஆறு இராச்சிய அரசின் ஆட்சி மையமாக விளங்கியது; தற்போதைய ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் (சுருக்கமாக விடுதலை இராச்சியம் எனவும் அறியப்படுகின்றது) தலைநகரமாகவும் விளங்குகின்றது.
1910இல் புளும்பொன்டின் தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தலைமையிடமானது. இங்கு பல அரசுக் கட்டிடங்களும் மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ளன.
புவியியலும் வானிலையும்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் புளும்பொன்டின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
83
31
15
|
111
29
15
|
72
27
12
|
56
23
8
|
17
20
3
|
12
17
-2
|
8
17
-2
|
15
20
1
|
24
24
5
|
43
26
9
|
58
28
12
|
60
30
14
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: SAWS[5] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
புளும்பொன்டின் மத்திய தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஈரப்பதம் இல்லாத நிலப்பகுதியாக உள்ளது. புளும்பொன்டினைச் சுற்றிலும் சிறு குன்றுகள் உள்ளன. இந்நிலப்பகுதியில் பெரும்பாலும் புல் வளர்கின்றது. வெப்பமானக் கோடைக்காலத்தையும் மிதமான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது; ஆகத்து 2006இல் பனித்தூவி பொழிந்தது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Bloemfontein (1961−1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 39.3 (102.7) |
38.9 (102) |
34.7 (94.5) |
33.3 (91.9) |
29.5 (85.1) |
24.5 (76.1) |
24.1 (75.4) |
28.6 (83.5) |
33.6 (92.5) |
34.8 (94.6) |
36.6 (97.9) |
37.7 (99.9) |
39.3 (102.7) |
உயர் சராசரி °C (°F) | 30.8 (87.4) |
28.8 (83.8) |
26.9 (80.4) |
23.1 (73.6) |
20.1 (68.2) |
16.8 (62.2) |
17.4 (63.3) |
20.0 (68) |
24.0 (75.2) |
26.1 (79) |
28.1 (82.6) |
30.1 (86.2) |
24.4 (75.9) |
தினசரி சராசரி °C (°F) | 22.8 (73) |
21.4 (70.5) |
19.2 (66.6) |
14.9 (58.8) |
10.7 (51.3) |
6.9 (44.4) |
7.2 (45) |
10.1 (50.2) |
14.6 (58.3) |
17.5 (63.5) |
19.9 (67.8) |
21.9 (71.4) |
15.6 (60.1) |
தாழ் சராசரி °C (°F) | 15.3 (59.5) |
14.7 (58.5) |
12.4 (54.3) |
7.7 (45.9) |
2.5 (36.5) |
-1.5 (29.3) |
-1.9 (28.6) |
0.5 (32.9) |
5.2 (41.4) |
9.1 (48.4) |
11.7 (53.1) |
13.8 (56.8) |
7.5 (45.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.6 (42.1) |
4.3 (39.7) |
0.8 (33.4) |
-2.6 (27.3) |
-8.7 (16.3) |
-9.1 (15.6) |
-9.6 (14.7) |
-9.7 (14.5) |
-6.7 (19.9) |
-2.9 (26.8) |
-0.1 (31.8) |
3.3 (37.9) |
−9.7 (14.5) |
பொழிவு mm (inches) | 83 (3.27) |
111 (4.37) |
72 (2.83) |
56 (2.2) |
17 (0.67) |
12 (0.47) |
8 (0.31) |
15 (0.59) |
24 (0.94) |
43 (1.69) |
58 (2.28) |
60 (2.36) |
559 (22.01) |
% ஈரப்பதம் | 55 | 62 | 64 | 66 | 62 | 62 | 57 | 50 | 46 | 50 | 52 | 52 | 57 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 11 | 11 | 11 | 9 | 4 | 3 | 2 | 3 | 4 | 7 | 9 | 10 | 84 |
சூரியஒளி நேரம் | 296.3 | 247.9 | 258.6 | 250.2 | 266.0 | 249.9 | 272.6 | 285.9 | 278.0 | 290.9 | 296.5 | 319.5 | 3,312.3 |
Source #1: NOAA[6] | |||||||||||||
Source #2: தென்னாப்பிரிக்க வானிலை சேவை[5] |
பொருளியல்நிலை
[தொகு]நகரின் பொருளியல் பெரும்பாலும் அடைக்கப்பட்ட பழம், கண்ணாடி பொருட்கள், தளபாடம், நெகிழிகள், மற்றும் இரும்புவழிப் போக்குவரத்து பொறியியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நகரின் வடகிழக்கில் 160 கிமீ (100 மைல்) தொலைவில் தங்கக் களங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் நகரின் பொருளியல் வளர்ச்சி விரைவாக இருந்தது. ஆரஞ்சு ஆறு திட்டமும் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இத்திட்டத்தின் பயனாக அனல்மின்சாரமும் நீர்பாசனத்திற்கும் மனிதருக்கும் நீரும் கிடைக்கின்றது.
விளையாட்டுக்கள்
[தொகு]புளும்பொன்டினின் பரவலான உடல் திறன் விளையாட்டுக்களாக காற்பந்தாட்டம், ரக்பி, துடுப்பாட்டம் உள்ளன. 2010இல் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் உலகக்கோப்பை சில ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன.
புளும்பொன்டினின் புகழ்பெற்ற மக்கள்
[தொகு]- புகழ்பெற்ற மெய்வல்லுனர் சோலா பஃட்
- மொழியறிவியல் அறிஞரும் த லோட் ஒவ் த ரிங்ஸ் புதினத்தின் எழுத்தாளருமான ஜே. ஆர். ஆர். டோல்கீன்
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Chronological order of town establishment in South Africa based on Floyd (1960:20-26)" (PDF). pp. xlv–lii.
- ↑ "புளும்பொன்டின்". பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Bloemfontein: Did you know? பரணிடப்பட்டது 2008-03-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bloemfontein: General Information
- ↑ 5.0 5.1 "புளும்பொன்டின் வானிலைத் தரவுகள்". தென்னாப்பிரிக்க வானிலை சேவை. Archived from the original on மார்ச் 4, 2012. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "புளும்பொன்டின் வானிலை நிலை 1961−1990". தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 29, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bloemfontein
- Bloemfontein The official Mangaung Local Municipality website
- "Bloemfontein". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது). (1922). [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]