உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய அலகு நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய அலகு நாரை
பிலிப்பீண்டு பலாவன் தீவில் பெரிய அலகு நாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆர்டியா
இனம்:
ஆ. சுமத்ரானா
இருசொற் பெயரீடு
ஆர்டியா சுமத்ரானா
(இராஃபிள்சு, 1822)

பெரிய அலகு நாரை (Great-billed heron)(ஆர்டியா சுமத்ரானா) தென்கிழக்காசியாவிலிருந்து பப்புவா நியூ கினி மற்றும் ஆத்திரேலியா வரை வசிக்கும் ஹெரான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவைச் சிற்றினமாகும்.

விளக்கம்

[தொகு]
இளம் நாரை

பெரிய அலகு நாரை ஒரு பெரிய வகை பறவை ஆகும். இது பொதுவாக 115 cm (45 அங்) உயரமாகவும், எடை 2.6 kg (5.7 lb) வரை இருக்கும். இது செந்நாரையை விட பெரியது. இறகுகள் மேலே பெரும்பாலும் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். பறக்கும்போது இது ஒரே மாதிரியான அடர் சாம்பல் நிற மேல் இறக்கையைக் கொண்டுள்ளது.

இவை மெதுவாகப் பறக்கக்கூடியது. இதன் கழுத்து பின்னோக்கி இருக்கும். இது ஹெரான்கள் மற்றும் குருகின் சிறப்பியல்புகளுடன் பெரிய நாரை, கொக்கு மற்றும் துடுப்பு வாயன்களிலிருந்துவேறுபடுகிறது. இவை நீளமான கழுத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சிற்றினம் ஆழமற்ற நீரில் உணவைத் தேடும். இதன் நீண்ட, கூர்மையான அலகு மீன்களைப் பிடிக்க உதவுகிறது. இது இரையினைப் பிடிக்க அசையாமல் காத்திருக்கும் அல்லது பின்தொடர்ந்து பிடிக்கும்.

பரவலும் வாழிடமும்

[தொகு]

பெரிய அலகு நாரை ஆத்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு உள்ளிட்ட கடலோர தெற்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியாவின் பெரும்பகுதியில் காணப்படுகிறது. தீவுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், பெரிய ஆறுகள் என இதன் வாழ்விடங்கள் பெரும்பாலும் கடலோரமாக உள்ளன. இருப்பினும், எப்போதாவது உள்நாட்டில், ஆழமற்ற குளங்களில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ardea sumatrana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.