மணிப்புரியம்
மணிப்புரியம் Meetei Mayek | |
---|---|
எழுத்து முறை வகை | |
பிராந்தியம் | மணிப்பூர் |
மொழிகள் | மணிப்புரியம் |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Mtei (337), Meitei Mayek (Meithei, Meetei) |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Meetei Mayek |
U+ABC0–U+ABFF | |
மணிப்புரியம் (Manipuri, মণিপুরি) அல்லது மேதி மொழி (Meitei-lon, মৈতৈলোন্, Meitei-lol, মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக (பட்டியல்-8) இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.
1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது.
மொழியின் தன்மைகள்
[தொகு]- இது பிராமிய மொழிக்குடும்பத்திலுள்ள அபுகிடா எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.
- இம்மொழியில் 15 மெய்யெழுத்துகளே உள்ளன. மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.[1]
- 1891-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.
மணிப்புரிய எண்களின் ஒலிப்பு
[தொகு]1 - அம, 2 - அனி, 3 - அகும், 4 - மரி, 5 - மேன்க, 6 - தருக், 7 -தரட், 8 -நிய்பன், 9 - மபன், 10 -ட்டர
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A Manipuri Grammar, Vocabulary, and Phrase Book - 1888 Assam Secretariat Press