உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டை நரம்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டை நரம்புகள் என்பது மூளையிலிருந்தும் மூளைத்தண்டிலிருந்தும் வெளியேறும். இவற்றின் எண்ணிக்கை 12. இதிலுள்ள ஒவ்வொரு நரம்பிற்கும் தனித்தனியான செயல்கள் உண்டு. ஒவ்வொரு நரம்பும் மூளையின் இருபுறமும் இருக்கும். இதை உரோமன் எழுத்துகளால் குறிப்பர்.

மண்டை நரம்புகள்

[தொகு]

மண்டை நரம்புகள் பின்வருமாறு:

  1. நுகர்தல் நரம்பு
  2. பார்வை நரம்பு
  3. விழியசைவு நரம்பு
  4. கப்பிஊடு நரம்பு
  5. முப்பிரிவு நரம்பு
  6. விழி வெளி நரம்பு
  7. முக நரம்பு
  8. செவிப்புலன் சமநிலைத்திறன் நரம்பு
  9. நாத்தொண்டை நரம்பு
  10. அலையுநரம்பு
  11. துணை நரம்பு
  12. கீழ்நாக்கு நரம்பு