உள்ளடக்கத்துக்குச் செல்

மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரத் தவளை (Tree frog) என்பது தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியினை மரங்களில் செலவிடும் தவளையினைக் குறிக்கின்றது.[1] நியோபாட்ராசியா பரம்பரை தவளைகளின் பல மரத் தவளைகளாக உள்ளன. இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில்லாமல் உள்ளன.

இவற்றின் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக குவிப்பரிணாம வளர்ச்சி, மிகவும் நெருங்கிய தொடர்பில்லாத உயிரினங்களில் உருவவியல் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.[2]

ஐரோப்பிய மரத் தவளை (கைலா அர்போரியா)

விளக்கம்

[தொகு]
சிவப்பு கண் மரத்தவளை, ஓசா தீபகற்பம், கோஸ்ட்டா ரிக்கா
கிளாடியேட்டர் மரத்தவளை (கைப்சிபோசு ரோசன்பெர்கி ), ஓசா தீபகற்பம், கோஸ்ட்டா ரிக்கா

பெயர் குறிப்பிடுவது போல, இந்த தவளைகள் பொதுவாக மரங்கள் அல்லது மற்ற உயரமான தாவரங்களில் காணப்படுகின்றன. இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடுவதைத் தவிர, இவை பொதுவாகத் தரைக்கு இறங்குவதில்லை, இருப்பினும் சில சிற்றினங்கள், இலைகளில் நுரைக் கூடுகளை உருவாக்குகின்றன. இவை அரிதாகவே மரங்களை விட்டு வெளியேறுகின்றன.

மரத் தவளைகளின் உடல் அளவானது பொதுவாக சிறியவையாக உள்ளது. இதனால் இவை எளிதாக தமது வாழிடமான மரக்கிளைகளில் எளிதில் இடம்பெயர முடியும். சில மரத்தவளைகள் 10 செ.மீ. நீளமுடையதாக இருக்கும் போது நிலத்தவளைகளை ஒப்பிட்டால் இவை நீளமாக மெலிதான உடலுடன் காணப்படும். மரக்கிளைகளை நன்கு பற்றிக்கொள்ளும் பொருட்டு பொதுவாக விரல் மற்றும் கால் நக முனைகளில் நன்கு வளர்ந்த வட்டுகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாகச் சிறந்த இவை சிறந்த பற்றும் திறனைக் கொண்டுள்ளன. கைரோமேண்டிசு மற்றும் ராகொபோரிடே பேரினத் தவளைகள் மிகவும் ஆற்றல் மிக்கவைகளாக உள்ளன. இவற்றில் இரண்டு இரண்டு விரல்கள் எதிர்த் திசையில் செயல்படுவதால் நன்றாகக் கிளைகளைப் பற்றுகின்றன.

குடும்பம்

[தொகு]

மரத் தவளைகள் கீழ்க்கண்ட குடும்பம் அல்லது பேரின உறுப்பினர்களாக உள்ளன.

கேலரி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Amphibians (2008-04-22). "Tree Frog Info". Animals.howstuffworks.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03.
  2. Rowley, Jodi. "Frogs in the trees". The Australian Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-01.

 

நூல் பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரத்_தவளை&oldid=3312015" இலிருந்து மீள்விக்கப்பட்டது