மிட்டிலீனி
மிட்டிலீனி Μυτιλήνη | |
---|---|
[[File:|270x220px|Clockwise from top: Panoramic view of the City of Mytilene, Archaeological Museum of Mytilene, Statue of Liberty, Characteristic samples of urban architecture, the seafront and Harbor of Mytilene, Church of Saint Therapon, and Lesbos Regional Unit Administration.]] Clockwise from top: Panoramic view of the City of Mytilene, Archaeological Museum of Mytilene, Statue of Liberty, Characteristic samples of urban architecture, the seafront and Harbor of Mytilene, Church of Saint Therapon, and Lesbos Regional Unit Administration. | |
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | North Aegean |
மண்டல அலகு: | லெஸ்போஸ் |
நகராட்சி: | Mytilene |
மேயர்: | Stratis Kytelis |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 57,872 |
- பரப்பளவு: | 566.7 km2 (219 sq mi) |
- அடர்த்தி: | 102 /km2 (264 /sq mi) |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 37,890 |
- பரப்பளவு: | 107.46 km2 (41 sq mi) |
- அடர்த்தி: | 353 /km2 (913 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 29,656 |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 8 m (26 ft) |
அஞ்சல் குறியீடு: | 811 00 |
தொலைபேசி: | 22510 |
வாகன உரிமப் பட்டை: | MY |
வலைத்தளம் | |
www.mytilene.gr |
மிட்டிலீனி (Mytilene (/ˌmɪtɪˈliːni/; கிரேக்க மொழி: Μυτιλήνη வார்ப்புரு:IPA-el) என்பது கிரேக்கத் தீவான லெஸ்போசின் தலைநகரம் மற்றும் அதன் துறைமுகம் ஆகும். இது வடக்கு ஏஜியன் பிராந்தியத்தின் தலைநகரம் மற்றும் நிர்வாக மையமாகவும் உள்ளது. மேலும் ஏஜியன் பல்கலைக்கழகத்தின் தலைமையகத்தையும் இது கொண்டுள்ளது. இந்த நகரம் கிமு 11 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
2019 இல் லெஸ்போஸ் தீவில் உருவாக்கப்பட்ட இரண்டு நகராட்சிகளில் மைட்டிலீன் ஒன்றாகும்; மற்றொன்று மேற்கு லெஸ்போஸ் ஆகும்.[2] தீவின் தென்கிழக்கு விளிம்பில் மிட்டிலீனி நகரம் அமைந்துள்ளது. இது கிழக்கு மரபுவழி திருச்சபையின் பெருநகர பிஷப்பின் அமைவிடமாகும்.
வரலாறு
[தொகு]மிட்டிலீனி ஒரு பழங்கால நகரமாக, தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்திருந்தது. துவக்கத்தில் மிட்டிலீனி ஒரு சிறிய தீவில் மட்டுமே இருந்தது. பின்னர் இது லெஸ்போசுடன் இணைக்கப்பட்டது. இதில் வடக்கு மற்றும் தெற்கு துறைமுகங்கள் உருவாக்கியன. மிட்டிலீனியின் துவக்ககால துறைமுகங்கள் பண்டைய காலத்தில் 700 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் மூலம் இணைக்கப்பட்டன. உரோமானிய எழுத்தாளர் லாங்கஸ் இரண்டு பக்கங்களையும் இணைக்கும் வெள்ளை கல் பாலங்கள் பற்றி குறிப்பிடுகிறார். கிரேக்கச் சொல்லான εὔριπος eúripos என்பது ஜலசந்தியைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல். இங்கிருந்த ஜலசந்தி மூன்று அடுக்கு ரோவர்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட டிரைரீம்ஸ் எனப்படும் பண்டைய போர்க்கப்பல்கள் செல்லத்தக்கதாக இருந்தது. இதில் கடந்து சென்ற படகுகள் சுமார். ஆறு மீட்டர் அகலமும், மற்றும் துடுப்புகள் துழாவக்கூடிய அகலம் கொண்டதாகவும், இரண்டு மீட்டர் ஆழம் கொண்டதாகவும் இருந்தது.
அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரத்தின் இரண்டு நிலப்பகுதிகளையும் பளிங்கு பாலங்கள் இணைத்தன. அபானோ ஸ்கலா என்ற பழைய சந்தையில் நீரிணை தொடங்குகிறது. இது மெட்ரோபோலிஸ் தெருவுக்கு அருகில் இருந்தது. அது தெற்கு துறைமுகத்தில் முடிந்தது. காலப்போக்கில் ஜலசந்தியில் மண் சேரத் தொடங்கியது. மிட்டிலீனி கோட்டையகத்தின் பாதுகாப்பிற்காக மனித செயல்பாடும் இருந்தது. ஜலசந்தி இறுதியில் தூர்ந்து நிலப்பகுதியாக ஆனது.[3]
கிமு ஏழாம் நூற்றாண்டில் தீவின் தலைமை இடத்துக்காக தீவின் வடக்கே உள்ள மிதிம்னாவுடன் மைட்டிலீன் பகுதி போட்டியிட்டு, தீவின் செழிப்பான கிழக்குப் பகுதியே இறுதியில் தலைமை மையமாக ஆனது. இந்த நகரின் மிகவும் பிரபலமான குடிமக்களாக கவிஞர்கள் சாஃபோ மற்றும் அல்கேயஸ் ஆகியோரும், அரசியல்வாதியான பிட்டகஸ் ( கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவர் ) ஆகியோரும் ஆவர். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெண்பொன் நாணயங்களின் பெருமளவு வெளியீட்டிற்கு இந்த நகரம் புகழ் பெற்றது.[4]
கிமு 428 இல் ஏதென்சுக்கு எதிரான மிட்டிலீனியன் கிளர்ச்சி ஏதெனியன் படையால் முறியடிக்கப்பட்டது. ஏதெனியன் பொது அவையில் இந்த நகரத்தின் ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்யவும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்கவும் வாக்களிக்கப்பட்டு தீர்மானிக்கபட்டது. ஆனால் அடுத்த நாள் மிட்டிலீனியன் விவாதத்தில் அவையின் எண்ணம் மாறியது. ஒரு வேகமான கப்பலிர் 186 கடல் மைல்கள் (344 கிமீ) தொலைவை ஒரு நாளுக்குள் பயணம் செய்து பொதுமக்கள் படுகொலையை ரத்து செய்யும் முடிவை அறிவித்தது. ஆனால் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக ஆயிரம் குடிமக்கள் தூக்கிலிடப்பட்டனர்.
மாசிடோனியாவின் அரசர் இரண்டாம் பிலிப்பின் மகன் அலெக்சாண்டருக்கு ஆசிரியராக இருந்த, அரிசுட்டாட்டில் தன் நண்பரும் வாரிசுமான தியோஃப்ராஸ்டசுடன் (தீவை பூர்வீகமாக கொண்டவர்) கி.மு. 337-335 காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் மிட்டிலீனியில் வாழ்ந்தார்.[5][6]
உரோமானியர்கள், அவர்களின் இளம் ஜூலியஸ் சீசர், கிமு 81 இல் மிட்டிலீனியை முற்றுகையிட்டு தோற்கடித்தனர்.[7] உரோமானியர் காலத்தில் நகரம் செழித்தது.
கி.பி 56 இல், அசோசிலிருந்து (சுமார் 50 கிமீ (31 மைல்) தொலைவில் பயணம் செய்து, பவுலின் மூன்றாவது சமயபரப்பு பயணத்தில் ( Acts 20:14:KJV ) திரும்பும் பயணத்தில் லூக்கா த சுவிசேஷகர், திருத்தூதர் பவுல் மற்றும் அவர்களது தோழர்கள் சிறிது நேரம் இங்கேயே நிறுத்தி இருந்தனர். மிட்டிலீனியில் இருந்து அவர்கள் கியோஸை நோக்கிச் சென்றனர் ( Acts 20:15:KJV ).
லாங்கசின் புதினமான Daphnis and Chloe, இதைச் சுற்றியுள்ள நாட்டை களமாகவும் நகரத்தின் விளக்கத்துடன் தொடங்குகிறது.
அறிஞரும் வரலாற்றாசிரியருமான ஜக்காரியாஸ் ரெட்டார், மிட்டிலீனியின் ஜக்காரியாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மிட்டிலீனினைச் சேர்ந்தவர் . இவர் 465 முதல் 536 வரை வாழ்ந்தார். அவர் மிட்டிலீனின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார் மேலும் ஒரு சால்சிடோனிய கிறித்தவராக இருக்கலாம். அவர் 536 மற்றும் 553 இல் இறந்தார் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[8]
மிட்டிலீனி நகரம் ஒன்பதாம் நூற்றாண்டின் பைசாந்திய புனிதர்களின் தாயகமாகவும் இருந்தது, அவர்கள் சகோதரர்கள், பேராயர் ஜார்ஜ், சைமியோன் ஸ்டைலிட்ஸ், டேவிட் தி மாங்க் ஆகியோர் ஆவர். புனித சிமியோன் தேவாலயம், மைட்டிலீன் மூன்று சகோதரர்களில் ஒருவரை போற்றி பாராட்டி மரியாதை செய்கிறது.
பழங்காலத்திலிருந்தே லெஸ்போஸ் மற்றும் மிட்டிலீனியில் யூத மக்கள் குடியிருந்து வந்தனர். 1170 ஆம் ஆண்டில், துடேலாவின் பெஞ்சமின் தீவில் பத்து சிறிய யூத சமூகங்களைக் கண்டார்.[9]
இடைக்காலத்தில், இது பைசந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் 1085 இல் டிசாச்சாசின் கீழ் செல்யூக் அரசமரபினரால் சில காலம் ஆக்கிரமிக்கப்பட்டது. 1198 ஆம் ஆண்டில் , வெனிஸ் குடியரசு இந்த நகரின் துறைமுகத்தின் வணிக உரிமையைப் பெற்றது.
13 ஆம் நூற்றாண்டில், இது நைசியாவின் பேரரசர் முதலாம் தியோடர் லஸ்காரிஸால் கைப்பற்றப்பட்டது. 1335 ஆம் ஆண்டில், பைசாந்தியர்கள், உதுமானிய படைகளின் உதவியுடன், தீவை மீண்டும் கைப்பற்றினர். 1355 ஆம் ஆண்டில், பேரரசர் ஜான் வி பாலியோலோகோஸ் இதை ஜெனோயிஸ் சாகசக்காரர் பிரான்செஸ்கோ கட்டிலூசியோவிடம் வழங்கினார். அவர் பேரரசரின் சகோதரி மரியாவை மணந்தார். அவர்கள் 1373 ஆம் ஆண்டில் கோட்டையைப் புதுப்பித்தனர். 1462 ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் இரண்டாம் மெகமுது இதை முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்படும் வரை இது ஜெனோயிஸின் கைகளில் இருந்தது.
1912 ஆம் ஆண்டு பால்கன் போர் வரை, லெஸ்போஸின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து மைட்டிலீன் உதுமானியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1912 நவம்பரில் இது கிரேக்க இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது.
காட்சியகம்
[தொகு]-
மிட்டிலீனி தொல்லியல் அருங்காட்சியகத்தில் கண்காட்சிகள்
-
இரவில் புனித தெரபோன் தேவாலயம்
-
நகர மண்டபம்
-
ஹோட்டல் பைர்கோஸ்
-
பனோரமிக் காட்சி
-
Zoodochos Pigi தேவாலயம்
-
கார்சி ஹமாம், மிட்டிலீனி
-
மிட்டிலீனி தெரு
-
பாரம்பரிய மர வேலைப்பாடு
-
ஒரு தேவாலயம்
-
ஹோட்டல் ஒலிம்பியாஸ்
-
செயின்ட் அத்தனாசியோஸ் கதீட்ரல்
-
செயின்ட் அதானசியஸ் மணிக்கோபுரம்
-
தியோஃபிலோஸ் கலை சங்கத்தின் கட்டிடம்
-
பனியில் மிட்டிலீனி
-
மிட்டிலீனி கோட்டையகம்
குறிப்புகள்
[தொகு]- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ "Τροποποίηση του άρθρου 1 του ν. 3852/2010" [Amendment of Article 1 of l. 3852/2010]. Government Gazette. p. 1164.
- ↑ Harbor of Mytilene பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம் accessed July 31, 2014
- ↑ "Mytilene - Asia Minor Coins - Photo Gallery". www.asiaminorcoins.com. Archived from the original on 2018-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
- ↑ Bio of Theophrastus accessed December 11, 2007
- ↑ Grade Saver bio on Aristotle accessed December 11, 2007
- ↑ Thorne, James (2003). Julius Caesar: Conqueror and Dictator. The Rosen Publishing Group. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3595-6.
- ↑ The Syriac Chronicle Known as That of Zachariah of Mitylene accessed July 31, 2014
- ↑ Before The Deluge: Jews Of The Mediterranean Islands (Part I) accessed July 31, 2014