ரத்த மரியாள் (புனைகதை)
தற்கால மேற்கத்திய நவீன புனைகதைகளில், ரத்த மரியாள் என்பது கண்ணாடியின் முன் தன் பெயரை மூன்றுமுறை கூப்பிட்டால் தோன்றும் ஒரு பேய் அல்லது சூன்யக்காரியை குறிக்கும். இந்தப் பேயை நரக மரியாள் எனவும் வேறு சில பெயர்களிலும் குறிப்பிடுவர். [1]
நம்பிக்கைகள்
[தொகு]கட்டுக்கதைகளில், ரத்த மரியாள் என்பது இந்தப் பேயின் பெயரை கண்ணாடியின் முன் பல முறை கூப்பிடும் ஒரு வித விளையாட்டாகும். இது பொதுவாக சிறுவர்கள் ஒன்றாக இரவுகளை கழிக்கும் போது விளையாடப்படுகிறது. இதில் பங்குபெறுவோர், ரத்த மரியாளை வரவழைக்க இருட்டில் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு(பொதுவாக குளியலறையில்) இவளுடைய பெயரை மூன்று முறை உச்சரிப்பர். இவளின் பெயரை நூறு முறை உச்சரிப்பது, நடுநிசியில் உச்சரிப்பது, சுற்றுவது, கண்களை கசக்குவது, இவளின் பெயரை மெழுகுவர்த்தியுடன் 13 முறை உச்சரிப்பது என பலவாறாகவும் இவளை தோன்றவைப்பதற்கான வழிமுறைகளாக நம்பப்படுகிறது.சில கட்டுகதைகளில், ரத்த மரியாளை அழைப்பவர்கள், ரத்த மரியாளே, உன் குழந்தையை கொன்றது நான் தான் என கூறினால் தோன்றுவதாக உள்ளது. இந்த கட்டுக்கதைகளில் இரத்த மரியாள் தன் குழந்தைகளையே கொன்றதாலோ அல்லது அதனது தொலைத்ததாலோ பித்து பிடித்து இறுதியில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணாக கருதப்படுகிறாள். மரியாள் தவறுதலாக தன் பிள்ளைகளின் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவளாக கருதப்படும் கதைகளில், நான் மரியாளை நம்புகிறேன் என்று கூறினாள் இவள் தோன்றுவாள் என கருதப்படுகிறது.
இந்த விளையாட்டு, ஒருவரின் மன தைரியத்தை பரிசோதிப்பதற்காக விளையாடப்படுகிறது. ஏனெனில், ரத்த மரியாள் தோன்றினால், அழைத்தவரை முகத்தை கிழித்து, கண்களை பிடுங்கி, பித்து பிடிக்கச்செய்து, என பலவாறாக மிகவும் குரூரமாக கொலை செய்வாள் என நம்ப்பப்படுகிறது. எனினும் சில கதைகளில், இவளது பெயரை கண்ணாடியின் முன் பதின்மூன்று முறை கூறினாள் ரத்த மரியாள் தோன்றி, பிறகு இறந்த ஒருவருடன் பேச இயலும் என கூறப்படுகிறது. எனினும் இறந்தவருடன் 12:01 மணி வரை தான் பேச இயலும், அதற்கு பிறகு ரத்த மரியாளும் இறந்தவரும் மறைந்து விடுவர். வேறு சில கதைகளின் படி, அழைப்பவர் ரத்தமரியாளை நேரடியாக காணாமல், அவளது பிம்பத்தை கண்ணாடியில் கண்டால், ரத்த மரியாள் அழைத்தவரின் வருங்காலத்தை குறித்து முக்கியமாக திருமணம் மற்றும் பிள்ளைகளை குறித்து குறிகூறுவாள் என நம்பப்படுகிறது. [2]
மேலும் இருட்டு குளியறையில் ஒரு மங்களான மெழுகுவர்த்தியை கண்ணாடியின் முன் காட்டினால் ரத்த மரியாள் தோன்றுவாள் எனவும் கூறுப்படுகிறது. எனவே தான் இந்த செயல் செய்ய பல மேற்கத்திய சிறுவர்கள் அஞ்சுகின்றனர். இந்த புனைகதை நன்றாக பரவியிருக்கும் நகரில், ரத்த மரியாள் குழந்தை கொலைகாரியாக கருதப்பட்டு, இவளுடன் தொடர்புடைய ஒரு மயானத்தையும் காணலாம்
தோற்றம்
[தொகு]ரத்த மரியாள் புனைகதை இங்கிலாந்தின் அரசியான முதலாம் மரியாளை அடிப்படியாகக் கொண்டு எழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவளும் பலரை கொன்ற காரணத்துக்காக ரத்த மரியாள் என்றே வரலாற்றில் அறியப்படுகிறாள் [3][1] இந்த அரசி தன் வாழில் பல கருச்சிதைவுகளையும் போலி கருவுற்றலையும் எதிர்கொண்டாள். இவளது கருச்சிதைவுகள் வேண்டுமென்றே தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சில செவிவழி கதைகளில், ரத்த மரியாள் தன் குழந்தைகளை இழந்ததால் பித்து பிடித்த ஒரு அரசியாக கூற்ப்படுகிறாள்[4] எனினும் பெரும்பாலும். அரசி முதலாம் மேரி, இந்த புனைகதையில் வரும் பேய்க்கு பெயர் வர மட்டுமே காரணாமாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.
ரத்த மரியாளை அழைக்கும் சடங்கு, ஹாலோவீன் நாளில் ஒரு காலத்தில் செய்யப்பட்ட குறிபார்க்கும் சடங்கினை ஒத்ததாக உள்ளது. இந்த ஹாலோவீன் சடங்கின் படி, ஒரு இளம்பெண் படிக்கட்டுகளை பின்புறமாக, கையில் மெழுகு மற்றும் கண்ணாடியுடனும் இருட்டு வீட்டில் ஏறினால், அந்தப்பெண்ணின் வருங்கால கணவன் அந்த கண்ணாடியில் தெரிவான என நம்பப்பட்டது. எனினும் இதற்கு மாறாக மண்டை ஒட்டினை கண்டால், அந்தப்பெண் திருமணத்துக்கு முன்பே இறந்துவிடுவால் என்பதை இது குறித்தது. ஆகவே, இதுவும் ரத்த மரியாள் புனைகதை உருவாவதற்கு காரணாமக் இருந்திருக்கலாம்.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Urban Legends Reference Pages: Bloody Mary
- ↑ Sகாண்க, Bill Ellis, Lucifer Ascending: The Occult in Folklore and Popular Culture (University of Kentucky, 2004). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8131-2289-9
- ↑ Bloody Mary, Mary Worth and other variants of a modern legend - MythologyWeb
- ↑ "Obiwan's UFO-Free Paranormal Page > Ghosts and Hauntings FAQ > Urban Legends > Bloody Mary". Archived from the original on 2012-08-27. பார்க்கப்பட்ட நாள் 2008-04-02.
- ↑ Ellis, op. cit.; see also Ronald Hutton, Stations of the Sun: A History of the Ritual Year in Britain, (Oxford, 2001). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-285448-8
வெளி இணைப்புகள்
[தொகு]- கண்ணாடியில் இருந்த முகம் - பல்வேறு ரத்த மரியாள் குறித்த கதைகளின் தொகுப்பு
- ghosts.orgஇல் ரத்த மரியாளை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்பரணிடப்பட்டது 2012-02-19 at the வந்தவழி இயந்திரம்