உள்ளடக்கத்துக்குச் செல்

ராகி ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராகி ரொட்டி (கன்னடம்: ರಾಗಿ ರೊಟ್ಟಿ) (மராத்தி: नाचणी ची भाकरी ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தின் காலை உணவு ஆகும். இது தெற்கு கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான உணவு. இது கேழ்வரகு மாவினால் தயாரிக்கப்படுகிறது. ராகி-ரொட்டி என்ற கன்னடச் சொல்லுக்கு கேழ்வரகு ரொட்டி என்று பொருள். இது அக்கி ரொட்டியைப் போலத் தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகு மாவானது உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கப்படுகிறது. மாவு பிசையும்போது; வெட்டிய வெங்காயம் கேரட் போன்றவை சேர்க்கப்படுகின்றன, இதனுடன் கொத்தமல்லித் தழை மற்றும் சீரகம் ஆகியவற்றையும் சுவைக்காக சேர்க்கலாம். தோசைக் கல்லில் சற்று எண்ணெயைத் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டி, சிறிதளவு எண்ணெயை ரொட்டிமேல் பூசி நன்கு வெந்த பின்னர் சூடாக பரிமாறவேண்டும். உடன் சட்டினி இருந்தால் நல்லது.

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகி_ரொட்டி&oldid=4052160" இலிருந்து மீள்விக்கப்பட்டது