உள்ளடக்கத்துக்குச் செல்

ராசா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசா (P130)
மலேசிய மக்களவைத் தொகுதி
நெகிரி செம்பிலான்
Rasah (P130)
Federal Constituency in Negeri Sembilan
ராசா மக்களவைத் தொகுதி
(P130 Rasah)
மாவட்டம்சிரம்பான் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை158,131 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிராசா தொகுதி
முக்கிய நகரங்கள்ராசா, சிரம்பான், லாபு, ரந்தாவ்
பரப்பளவு234 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சா கீ சின்
(Cha Kee Chin)
மக்கள் தொகை256,585[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ராசா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rasah; ஆங்கிலம்: Rasah Federal Constituency; சீனம்: 亚沙国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P130) ஆகும்.[5]

ராசா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து ராசா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சிரம்பான் மாவட்டம்

[தொகு]

சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

ராசா மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் ராசா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (32.9%)
  சீனர் (42.4%)
  இதர இனத்தவர் (2.4%)
ராசா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் ராசா தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P108 1986–1990 கு செப்பாங்
(Hu Sepang)
ஜனநாயக செயல் கட்சி
8-ஆவது மக்களவை 1990–1995 வோங் சி வா
(Wong See Wah)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
9-ஆவது மக்களவை P118 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 கோ சியோ குவாட்
(Goh Siow Huat)
11-ஆவது மக்களவை P130 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 அந்தோனி லோக்
(Anthony Loke)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 தியோ கோக் சியோங்
(Teo Kok Seong)
14-ஆவது மக்களவை 2018–2022 சா கீ சின்
(Cha Kee Chin)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

கோலா பிலா தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சா கீ சின்
(Cha Kee Chin)
பாக்காத்தான் அரப்பான்81,43468.044.41
நிங் கியான் நாம்
(Ng Kian Nam)
பாரிசான் நேசனல்19,44716.251.26
டேவிட் சோங் வீ கிங்
(David Chong Vee Hing)
பெரிக்காத்தான் நேசனல்18,81015.7215.72 Increase
மொத்தம்1,19,691100.00
செல்லுபடியான வாக்குகள்1,19,69198.98
செல்லாத/வெற்று வாக்குகள்1,2371.02
மொத்த வாக்குகள்1,20,928100.00
பதிவான வாக்குகள்1,55,89676.787.48
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]