ரோசா போன்கியூர்
ரோசா போன்கியூர் | |
---|---|
சுமார் 1863இல் ஆண்ட்ரே அடால்ப் என்பவரால் எடுக்கப்பட்ட ரோசா போன்கியூரின் புகைப்படம் | |
பிறப்பு | மேரி-ரோசாலி போன்கியூர் 16 மார்ச்சு 1822 பொர்தோ, பிரான்ஸ் |
இறப்பு | 25 மே 1899 தோமெரி, பிரான்ஸ் | (அகவை 77)
தேசியம் | பிரெஞ்சுக்காரர் |
அறியப்படுவது | ஓவியம், சிற்பம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | புளோயிங் இன் தி நிவர்னைஸ், தி ஹார்ஸ் பேர் |
அரசியல் இயக்கம் | யதார்த்த பாணி |
ரோசா போன்கியூர் ( Rosa Bonheur ) (பிறப்பு:மேரி-ரோசாலி போன்கியூர் 16 மார்ச் 1822 - 25 மே 1899), ஓர் பிரெஞ்சுக் கலைஞராவார். இவர் பெரும்பாலும் விலங்குகளை வரையும் ஓவியராக அறியப்பட்டார். ஆனால் யதார்த்த பாணியில் ஓவியத்தை உருவாக்கும் ஓர் சிற்பியாவார். [1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பெண் ஓவியராக போன்கியூர் பரவலாகக் கருதப்பட்டார் . [2] இவரது ஓவியங்களில் புளோயிங் இன் தி நிவர்னைஸ், [3] 1848 ஆம் ஆண்டு பாரிஸின் கலைக்கண்காட்சியில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது பாரிஸில் உள்ள ஓர்சே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் தி ஹார்ஸ் பேர், [4] 1853 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது (1855 இல் வரை நடந்தது). இப்போது நியூயார்க் நகரத்தில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.
இவர் வெளிப்படையாக தன்னை அகனளாக அறிவித்துக் கொண்டார். இவர் தனது கூட்டாளியான நதாலி மைக்காஸுடன் அவர் இறக்கும் வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அதன் பிறகு இவர் அமெரிக்க ஓவியர் அன்னா எலிசபெத் கிலம்ப்கேவுடன் உறவைத் தொடங்கினார். [5]
ஆரம்ப வளர்ச்சியும் கலை பயிற்சியும்
[தொகு]போன்கியூர் மார்ச் 16, 1822 அன்று தென்மேற்கு பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரை அருகில் கரோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பொர்தோ என்ற இடத்தில் கலைஞர்களின் குடும்பத்தில் மூத்த குழந்தையாகப் பிறந்தார். [6] இவரது தாயார் சோபி போன்கியூர் ஒரு பியானோ ஆசிரியர்; ரோசாவுக்கு பதினொரு வயது இருக்கும்போது அவர் இறந்தார். இவரது தந்தை ஆஸ்கார்-ரேமண்ட் போன்கியூர், ஒரு இயற்கை மற்றும் உருவப்பட ஓவியர். அவர் தனது மகளின் கலைத் திறமைகளை ஊக்குவித்தார். [7] யூத வம்சாவளியாக இருந்தாலும், [8] போன்கியூர் குடும்பம் ஒரு கிறிஸ்தவ - சமூகவுடைமைப் பிரிவான செயிண்ட்-சிமோனியனிசத்தை கடைப்பிடித்தது. இது ஆண்களுடன் பெண்களின் கல்வியையும் ஊக்குவித்தது. போன்கியூரின் உடன்பிறந்தவர்களில் விலங்கு ஓவியர்களான அகஸ்டே போன்கியூர், ஜூலியட் போன்கியூர் விலங்குச் சிற்பி இசிடோர் ஜூல்ஸ் போன்கியூர் ஆகியோரும் அடங்குவர். பிரான்சிஸ் கால்டன் என்பவர் 1869 ஆம் ஆண்டு இதே தலைப்பில் எழுதிய கட்டுரையில் "பரம்பரை மேதை" க்கு உதாரணமாக இவர்கள் குடும்பத்தைப் பயன்படுத்தினார். [9]
இவரது ஆறாவது வயதில் இவரது குடும்பம் 1828 இல் பாரிஸுக்கு குடிபெயர்ந்தது. இவர் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பென்சில் மற்றும் காகிதத்துடன் ஒரு நேரத்தில் மணிக்கணக்கில் ஓவியம் வரையக் க்ற்றுக் கொண்டார். படிக்கக் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது.[10] எழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் வெவ்வேறு விலங்கைத் தேர்ந்தெடுத்து வரையச் சொல்லி இவருடைய தாயார் இவருக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார். [11]
பள்ளியில் இவர் அடிக்கடி இடையூறு விளைவித்தார். மேலும் பல முறை வெளியேற்றப்பட்டார். [12] பன்னிரெண்டாவது வயதில் தையல்காரரிடம் பெற்ற பயிற்சி தோல்வியடைந்த பிறகு, இவரது தந்தை ஒரு ஓவியராகப் இவருக்குப் பயிற்சி அளித்தார். உயிருள்ள விலங்குகளைப் படிப்பதற்காக குடும்பத்தின் அரங்கத்திற்குக் கொண்டுவந்து விலங்குகளை ஓவியம் வரைவதில் இவரது ஆர்வத்தைத் தொடர இவருடைய தந்தை அனுமதித்தார். [13]
அந்தக் காலத்தின் பாரம்பரிய கலைப் பள்ளி பாடத்திட்டத்தைப் பின்பற்றி, புத்தகங்கள் வரைவதிலிருந்து படங்களை நகலெடுப்பதன் மூலமும், மாதிரிகளை வரைவதன் மூலமும் இவர் தனது பயிற்சியைத் தொடங்கினார். இவரது பயிற்சி முன்னேறியதும், குதிரைகள், செம்மறி ஆடுகள், மாடுகள், ஆடுகள், முயல்கள் மற்றும் பிற விலங்குகள் உட்பட வளர்ப்பு விலங்குகள், பாரிஸைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்கள், அருகிலுள்ள திறந்தவெளிகள், பொதுப் பூங்கா போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்தார். [14] பதினான்கு வயதில், இவர் இலூவா அருங்காட்சியத்தின் ஓவியங்களை நகலெடுக்கத் தொடங்கினார். [7] இவருக்கு பிடித்த ஓவியர்களில் நிக்கோலா போசின் , பீட்டர் பவுல் ரூபென்ஸ் ஆகியோர் அடங்குவர். ஆனாலும் இவர் பிற கலைஞர்கலின் ஓவியங்களையும் நகலெடுத்தார். [14]
இவர் பாரிஸின் இறைச்சிக் கூடங்களில் விலங்கு உடற்கூற்றியலையும் எலும்பியலையும் படித்தார். மேலும், பாரிஸில் உள்ள தேசிய விலங்கு மருத்துவ நிறுவனத்தின் அடிதொட்டியில் விலங்குகளைப் பிரித்தார். [15] அங்கு இவர் விரிவான ஆய்வுகளைக் கொண்டிருந்தார். பின்னர் இவர் தனது ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கான குறிப்புகளாகப் பயன்படுத்தினார். இந்த காலகட்டத்தில், இவர் தந்தை மற்றும் மகன்களான ஒப்பீட்டு உடற்கூறியல் நிபுணர்கள் மற்றும் விலங்கியல் நிபுணர்களான எட்டியென் ஜெப்ராய் செயிண்ட்-கிலேர் மற்றும் இசிடோர் ஜெப்ராய் செயிண்ட்-கிலேர் ஆகியோருடன் நட்பு கொண்டார். [16]
ஆரம்ப வெற்றி
[தொகு]பிரெஞ்சு அரசாங்க ஆணையம் 1849 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள ஓர்சே அருங்காட்சியகத்தில் இவரது புளோயிங் இன் தி நிவர்னைஸ் என்ற படைப்பு காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் இது முதல் பெரிய வெற்றியானது. [17] இவரது மிகவும் பிரபலமான படைப்பும், நினைவுச்சின்னமுமான தி ஹார்ஸ் பேர், 1855 இல் முடிக்கப்பட்டது. இது எட்டு அடி உயரமும் பதினாறு அடி அகலமும் கொண்டது. [18] இது ஓவியத்தின் பின்னணியில் தெரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரங்களால் ஆன மேய்ச்சல் நிலம் பாரிஸில் நடைபெற்ற குதிரைச் சந்தையை சித்தரிக்கிறது. இதன் இலண்டனில் உள்ள லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் குறைக்கப்பட்ட பதிப்பு உள்ளது. [19] இந்தப் பணி இவருக்கு சர்வதேச புகழுக்கும் அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது; அதே ஆண்டு இவர் இசுக்கொட்லாந்து சென்று ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணியைச் சந்தித்தார். அவர் போன்கியூரின் வேலையைப் பாராட்டினார். அங்கே, 1859 இல் ஹைலேண்ட் ஷெப்பர்ட், 1860 இல் எ ஸ்காட்டிஷ் ரெய்டு உள்ளிட்ட பிற்கால படைப்புகளுக்கான ஓவியங்களை முடித்தார். இந்தப் படைப்புகள் இசுக்காட்டிஷ் மலைப்பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காணாமல் போன வாழ்க்கை முறையை சித்தரித்தன. மேலும் அவை விக்டோரியா கால உணர்வுகளுக்கு மகத்தான ஈர்ப்பைக் கொண்டிருந்தன.
1893 இல் சிகாகோ, இல்லினாய்ஸில் நடந்த உலக கொலம்பியக் கண்காட்சியில் தனது படைப்புகளை காட்சிப்படுத்தினார்.[20]
தனது சொந்த நாடான பிரான்ஸை விட இங்கிலாந்தில் மிகவும் பிரபலமாக இருந்தபோதிலும், இவர் 1865 ஆம் ஆண்டில் பேரரசி யூஜெனியால் பிரெஞ்சு செவாலியே விருது மூலம் அலங்கரிக்கப்பட்டார். மேலும் 1894 இல் ஆணையின் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.[21] இந்த விருதைப் பெற்ற முதல் பெண் கலைஞர் இவர்தான்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவரது காலத்தில் பெண்கள் பெரும்பாலும் தயக்கத்துடன் கலைஞர்களாக மட்டுமே கல்வி கற்றனர், மேலும் இவர் ஒரு வெற்றிகரமான கலைஞராக ஆனதன் மூலம் இவரைப் பின்தொடர்ந்த பெண் கலைஞர்களுக்கு கதவுகளைத் திறக்க உதவினார். [22]
ஆண்களின் ஆடைகளை அணிவதற்காக இவர் அறியப்பட்டார்; [23] தான் கால்சட்டைகளைத் தேர்ந்தெடுத்தது விலங்குகளுடன் வேலை செய்வதற்கான நடைமுறைக்குக் காரணம் என்று கூறினார். [24]
இவர் தன்னை வெளிப்படையாக அகனளாக அறிவித்துக் கொண்டார். இருப்பினும், பெண்களுடனான இவரது உறவுகள் பாலியல் ரீதியாக இருந்தன என்பதை உறுதிப்படுத்தவில்லை. [25] இவர் தனது முதல் கூட்டாளியான நதாலி மைக்காஸுடன் அவர் இறக்கும் வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். பின்னர் அமெரிக்க ஓவியர் அன்னா எலிசபெத் கிளம்ப்கேவுடன் உறவைத் தொடங்கினார். இவாறான வாழ்க்கை - குறிப்பாக பழங்குடித்தனம் - விலங்குகள் மற்றும் பெரும்பாலான பிரெஞ்சு அதிகாரிகளால் சீர்குலைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நேரத்தில், இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசியது அற்புதமானது.
இறப்பு
[தொகு]போன்கியூர் 25 மே 1899 அன்று தனது 77வது வயதில் பிரான்சின் தோமெரியில் இறந்தார்.[6] தனது வாழ்நாள் துணையான நதாலி மைக்காஸுடன் (1824 - 24 சூன் 1889), பாரிஸில் உள்ள பெரே லாச்சாய்ஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். கிலம்ப்கே போன்கியூரின் மரணத்திற்குப் பிறகு ஒரே வாரிசாக இருந்தார். பின்னர் அவர் இறந்தவுடன் அதே கல்லறையில் மைக்காஸ் மற்றும் போன்கியூருடன் சேர்ந்தார். இவரது பல ஓவியங்கள், முன்பு பகிரங்கமாக காட்டப்படவில்லை, 1900 இல் பாரிஸில் ஏலத்தில் விற்கப்பட்டது.[26]
16 மார்ச் 2022 அன்று, கூகுள் போன்கியூரின் இருநூறாவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் டூடுல் வழங்கி கௌரவித்தது.
சான்றுகள்
[தொகு]- NMWA.org Collection Profile - Bonheur article and artwork at NMWA.
மேலும் படிக்க
[தொகு]- Dore Ashton, Rosa Bonheur: A Life and a Legend. Illustrations and Captions by Denise Browne Harethe. New York: A Studio Book/The Viking Press, 1981 NYT Review
- Catherine Hewitt, Art is a Tyrant: The Unconventional Life of Rosa Bonheur. UK Published by Icon Books Ltd in 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Joseph J. Rishel, “Barbaro after the Hunt by Marie-Rosalie Bonheur (W1900-1-2)[தொடர்பிழந்த இணைப்பு],” in The John G. Johnson Collection: A History and Selected Works[தொடர்பிழந்த இணைப்பு], a Philadelphia Museum of Art free digital publication.
- How France is leveraging a lottery to finance historic preservation, 2020 PBS Newshour report with interior scenes of Bonheur's atelier
- Rosa Bonheur - Artcyclopedia search
- Rosa Bonheur - Rehs Galleries' biographical information and an image of her painting Couching Lion, 1872
- Rosa Bonheur Plowing in the Nivernais (1849). A video discussion about the painting from smarthistory.khanacademy.org
- A life without Compromise — Rosa Bonheur biography, artworks and writings on Trivium Art History
- Art and the empire city: New York, 1825-1861, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Bonheur (see index)
- "Bonheur, Rosa,--1822-1899." Library of Congress
- ↑ The Annotated Mona Lisa: A Crash Course in Art History from Prehistoric to Post-Modern.
- ↑ Janson, H. W., Janson, Anthony F. History of Art. Harry N. Abrams, Inc., Publishers. 6th edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-182895-9, page 674.
- ↑ "Musée d'Orsay: Rosa Bonheur Labourage nivernais". musee-orsay.fr. 25 March 2009. Archived from the original on 4 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Rosa Bonheur, The Horse Fair, Metropolitan Museum of Art
- ↑ "10 Famous Female Painters Every Art Lover Should Know". My Modern Met (in ஆங்கிலம்). 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
- ↑ 6.0 6.1 Kuiper, Kathleen. "Rosa Bonheur", Encyclopædia Britannica Online, Retrieved 23 May 2015.
- ↑ 7.0 7.1 Heather McPherson (2003). "Bonheur, (Marie-)Rosa". Bonheur, (Marie-)Rosa [Rosalie]. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/gao/9781884446054.article.T009871.
- ↑ Bus (24 May 2016). "The Realism of Rosa Bonheur".
- ↑ Galton, Francis. Hereditary Genius: An Inquiry into its Laws and Consequences. Second edition. (London: MacMillan and Co, 1892), p. 247. Original 1869.
- ↑ Mackay, James, The Animaliers, E.P. Dutton, Inc., New York, 1973
- ↑ Rosalia Shriver, Rosa Bonheur: With a Checklist of Works in American Collections (Philadelphia: Art Alliance Press, 1982) 2-12. (It must be said that, as a reference source this book is itself riddled with inaccuracies and mis-attributions but it accords with the consensus account on this matter.)
- ↑ Theodore Stanton, Reminiscences of Rosa Bonheur (New York: D. Appleton and company, 1910), Theodore Stanton, Reminiscences of Rosa Bonheur (London: Andrew Melrose, 1910).
- ↑ Gaze, Delia, ed. (1997). Dictionary of Women Artists. Vol. I. London and Chicago: Fitzroy Dearborn Publishers. pp. 288–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-21-3.
- ↑ 14.0 14.1 Boime, Albert. "The Case of Rosa Bonheur: Why Should a Woman Want to be More Like a Man?", Art History v. 4, December 1981, p. 384-409.
- ↑ Wild Spirit: The Work of Rosa Bonheur by Jen Longshaw
- ↑ Ashton, Dore and Denise Browne Hare. Rosa Bonheur: A Life and a Legend, (New York: Viking, 1981, 206pp.
- ↑ "Rosa Bonheur: Labourage nivernais". ஓர்சே அருங்காட்சியகம். Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
- ↑ "The Horse Fair at Albright Knox Gallery". Archived from the original on 25 June 2007. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018., sketch for the London version; the sketch for the New York version is in the Ludwig Nissen Foundation, see: C. Steckner, in: Bilder aus der Neuen und Alten Welt. Die Sammlung des Diamantenhändlers Ludwig Nissen, 1993, p. 142 and spaeth.net பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2004 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Horse Fair, National Gallery
- ↑ Nichols, K. L. "Women's Art at the World's Columbian Fair & Exposition, Chicago 1893". பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
- ↑ "Base Léonore, recensement des récipiendaires de la Légion d'honneur". culture.gouv.fr.
- ↑ Stanton, Theodore (1910). Reminiscences of Rosa Bonheur (with twenty-four full-page illustrations and fifteen line drawings in the text. A. Melrose. p. 64.
- ↑ Britta C. Dwyer, "Bridging the gap of difference: Anna Klumpke's "union" with Rosa Bonheur", Out of context. (New York: Greenwood Press, 2004), p. 69-79.; Laurel Lampela, "Daring to be different: a look at three lesbian artists", Art Education v.54 no. 2 (March 2001), p. 45-51. and Gretchen Van Slyke, "The sexual and textual politics of dress: Rosa Bonheur and her cross-dressing permits", Nineteenth-Century French Studies v. 26 no. 3-4 (Spring/Summer 1998) p. 321-35.
- ↑ Janson: History of Art, page 929
- ↑ Boime, Albert (December 1981). "The case of Rosa Bonheur: Why should a woman want to be more like a man?". Art History 4 (4): 384–409. doi:10.1111/j.1467-8365.1981.tb00733.x.
- ↑ "Bonheur, Rosa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.