லி பை
லி பை | |
---|---|
பிறப்பு | லி பை 701 சுயி யே |
இறப்பு | 762 டான் டு |
தொழில் | புலவர் |
தேசியம் | சீனர் |
காலம் | தாங் வம்சம் |
லி பை அல்லது லி போ (Li Bai அல்லது Li Po. சீனம்: 李白; பின்யின்: Lǐ Bái / Lǐ Bó) (701-762) ஒரு சீனப் புலவர் ஆவார். இன்னொரு சீனப் புலவரான டு ஃபு என்பார் வைன் கிண்ணத்தின் இறவா எண்மர் என்று இவரையும் சேர்த்துத் தான் எழுதிய கவிதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். டு ஃபுவும், லி பையும் சீன இலக்கிய வரலாற்றில் இரண்டு பெரும் புலவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். லி பை எழுதிய ஏறத்தாழ 1,100 பாடல்கள் இன்று கிடைக்கின்றன. இவரது பாடல்களின் முதல் மேற்கத்திய மொழியிலான மொழிபெயர்ப்பு 1862ல் மார்க்குயிஸ் டி'ஹார்வி டி எயிண்ட்-டெனிஸ் என்பவரால் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் ஹேர்பேர்ட் அலன் கைல்ஸ் என்பார் சீன இலக்கியத்தின் வரலாறு பற்றி எழுதிய ஆங்கில நூலில் லி பையின் கவிதைகளை ஆங்கில மொழி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார். எஸ்ரா பவுண்ட் என்பவர் லி பையின் கவிதைகளை யப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
லி பை அவரது கவிதைகளில் காணப்படும் மிகுந்த கற்பனைத் திறனுக்காகவும், தாவோயிச கருத்துக்களுக்காகவும், மதுபானம் மீது அவர் கொண்ட காதலுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரும் தனது வாழ்வின் பெரும்பகுதியைப் பயணம் செய்தே கழித்தார். எனினும் இவரது விடயத்தில் இவரிடமிருந்த செல்வமே இப்பயணங்களை மேற்கொள்ள உதவினவேயன்றி, ஏழ்மை காரணமாக இவர் பயணம் செய்யவில்லை. யாங்சி ஆற்றில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நீரில் தெரிந்த சந்திரனின் பிம்பத்தைப் போதையில் கட்டியணைக்க முற்பட்டதனால் இவர் நீரில் மூழ்கியதாகச் சொல்லப்படுகின்றது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- டு பு - Du Fu