லும்பினி
லும்பினி, புத்தரின் பிறப்பிடம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, vi |
உசாத்துணை | 666 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1997 (21ஆவது தொடர்) |
லும்பினி
लुम्बिनी | |
---|---|
நகரம் | |
நாடு | நேபாளம் |
மண்டலம் | லும்பினி |
மாவட்டம் | ரூபந்தேஹி |
ஏற்றம் | 150 m (490 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | நேபாளி மொழி |
நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 32914 |
இடக் குறியீடு | 71 |
லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी ⓘ,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.
லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]
பார்க்க வேண்டிய பிற இடங்கள்
[தொகு]- பசுபதிநாத் கோவில்
- சங்கு நாராயணன் கோயில்
- முக்திநாத்
- பௌத்தநாத்
- பக்தபூர் நகர சதுக்கம்
- பாதன் நகர சதுக்கம்
- அனுமன் தோகா நகர சதுக்கம்
- பொக்காரா
- சுயம்புநாதர் கோயில்
- பொக்காரா
- காட்மாண்டு
- கண்டகி ஆறு
- சித்வான் தேசியப் பூங்கா
- நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Lumbini On Trial: The Untold Story பரணிடப்பட்டது 2015-09-12 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: லும்பினி
- Lumbini at the Open Directory Project
- WorldHeritageSite.org/Lumbini பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Some photos from Birth place of Lord Buddha, Lumbini பரணிடப்பட்டது 2016-08-21 at the வந்தவழி இயந்திரம்
- [1] Flight Schedules to Lumbini