உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தொகு  

அறிவியல் வலைவாசல்


அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.


தொகு  

சிறப்புக் கட்டுரை


மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இதில் மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். தானியங்கிகள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகவும் கைத்தொழிற் துறையில் அதிக எடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும்.
தொகு  

சிறப்புப் படம்


படிம உதவி: US Air Force

ஒளியணு (ஃபோட்டான்) என்பது ஓர் அடிப்படைத் துகளாகும். இது மின்காந்த இடைவினை, ஒளி மற்றும் அனைத்து பிற மின்காந்த கதிர்வீச்சுகளின் அடிப்படையான அலகளவாகக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது. இது நிறையற்றது, மின்சுமையற்றது; மேலும் வெளியில் தானாகச் சிதைவுறாது. இது வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடியது. படத்தில் இராணுவ வீரர் ஒருவர் சீரான லேசர் கற்றையிலிருந்து வெளிவரும் ஒளியணுக்களைப் பார்வையிடுகிறார்.

தொகு  

செய்திகளில் அறிவியல்



தொகு  

அறிவியலாளர்கள்‎


யோசெப் நிசிபோர் நியெப்சு (1765-1833) என்ற பிரான்சியர் ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை. 1825 இல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். 1829 முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். 1833 இல் நியேப்சு இறந்த பின்னர் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு டாகுவேரியோவகை என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து பிரான்சு அரசுக்கு விற்றார். நியெப்சு 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

இதே மாதத்தில்

தொகு  

பகுப்புகள்


அறிவியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|அறிவியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • அறிவியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • அறிவியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


கணிதம்‎ கணினியியல் தொழினுட்பம் உயிரியல்

மின்னணுவியல்‎ மருத்துவம் புவியியல் வானியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்