உள்ளடக்கத்துக்குச் செல்

வஸ்தோக் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஸ்தோக் விண்கலத்தின் மாதிரி

வஸ்தோக் திட்டம் (Vostok programme, ரஷ்ய மொழி: Восток, கிழக்கு) என்பது சோவியத் ஒன்றியத்தின் மனிதரை முதற்தடவையாக பூமியின் சுற்றுவட்டத்துக்கு வெற்றிகரமாக அனுப்பிய விண்கலத் திட்டம் ஆகும்.

திட்டங்கள்

[தொகு]

வஸ்தோக் மனிதப் பயணங்கள்

[தொகு]
நிரை சின்னம் திட்டம் ஏவல் காலம் மீளல் வீரர்கள் குறிப்பு
1 வஸ்தோக் 1 ஏப்ரல் 12 1961 1 ம 48 நி ஏப்ரல் 12 1961 யூரி ககாரின் விண்வெளியில் முதல் மனிதன்
2 வஸ்தோக் 2 ஆகஸ்ட் 6 1961 1 நா 1 ம 18 நி ஆகஸ்ட் 7 1961 கேர்மொன் டீட்டொவ் முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்தமை.
3 வஸ்தோக் 3 ஆகஸ்ட் 11 1962 3 நா 22 ம 22 நி ஆகஸ்ட் 15 1962 ஆண்ட்றியான் நிக்கொலாயெவ் முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
4 வஸ்தோக் 4 ஆகஸ்ட் 12 1962 2 நா 22 ம 56 நி ஆகஸ்ட் 15 1962 பவெல் பப்போவிச் முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
5 வஸ்தோக் 5 ஜூன் 14 1963 4 நா 23 ம 7 நி ஜூன் 19 1963 வலேரி பீக்கொவ்ஸ்கி முதலாவது நீண்ட நேர தனி மனித விண்வெளிப் பயணம்.
6 வஸ்தோக் 6 ஜூன் 16 1963 2 நா 22 ம 50 நி ஜூன் 19 1963 வலண்டீனா டெரெஷ்கோவா விண்வெளியின் முதல் பெண்.

திட்டமிடப்பட்ட பயணங்கள்

[தொகு]

இவற்றை விட வேறு ஏழு வஸ்தோக் பயணங்கள் (வஸ்தோக் 7 முதல் 13) திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இவை நிறுத்தப்பட்டு வஸ்கோத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]