விசுவநாதன் ஆனந்த்
விசுவநாதன் ஆனந்த் | |
---|---|
முழுப் பெயர் | விசுவநாதன் ஆனந்த் |
நாடு | இந்தியா |
பிறப்பு | திசம்பர் 11, 1969 மயிலாடுதுறை, இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (1988) |
உலக வாகையாளர் | 2000–02 (பிடே) 2007–2013 |
பிடே தரவுகோள் | 2753 (நவம்பர் 2021)[1] |
உச்சத் தரவுகோள் | 2817 (மே 2011) |
தரவரிசை | 16 (நவம்பர் 2021) |
உச்சத் தரவரிசை | 1 |
விசுவநாதன் ஆனந்த் (ஆங்கில மொழி: Viswanathan Anand, பிறப்பு: திசம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா),ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர். இம்மைல்கல்லை இவர் ஏப்ரல் 2006இல் அடைந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்[2].
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]விசுவநாதன் ஆனந்த் 1969 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் தேதி சென்னையில்[3][4] பிறந்தார்.[5] இவரது தந்தை, கிருஷ்ணமூர்த்தி விசுவநாதன், பீகாரில் உள்ள ஜமால்பூரில் கல்வி பெற்று பின்னர் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றினார். இவரது தாயார் சுசீலா ஒரு இல்லத்தரசி ஆவார்.அவர் ஒரு சதுரங்க ஆர்வலராகவும், செல்வாக்கு மிக்க சமூக ஆர்வலராகவும் இருந்தார்.[6] ஆனந்த் அவரது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது சகோதரர் சிவக்குமார், இந்தியாவில் உள்ள கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது சகோதரி அனுராதா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[7][8] இவர் தனது சகோதரியை விட 11 வயது இளையவராகவும் மற்றும் சகோதரனை விட 13 வயது இளையவராகவும் இருக்கிறார்.
ஆனந்த் தனது ஆறாவது வயதில் இருந்து தனது தாயிடமிருந்து சதுரங்கம் கற்கத் தொடங்கினார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் தேசிய இரயில்வேயில் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஆனந்த் தனது பெற்றோருடன் 1978 முதல் 80கள் வரை மணிலாவில் வாழ்ந்தார்.[9] அப்போதே அவர் சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
ஆனந்த், சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் [10] பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னை, இலயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[11]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஆனந்த் 1996 இல் அருணாவை மணந்தார். அவரது மகன் அகில் ஆனந்த், 9 ஏப்ரல் 2011 அன்று பிறந்தார்.[12][13] ஆனந்த் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர், கோவில்களில் உள்ள அமைதியையும், மகிழ்ச்சியான சூழலையும் ரசிப்பதற்காக கோவில்களுக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.[14] மேலும், தனது தினசரி பிரார்த்தனைகள், கவனம் சிதறாமல் சதுரங்கம் விளையாட உதவும் "உயர்ந்த மனநிலையை" அடைய உதவியதாகவும் கூறியுள்ளார்.[14] நூல்கள் வாசிப்பது, நீச்சல் மற்றும் இசை கேட்பது அவரது பொழுதுபோக்குகள் ஆகும்.[9]
24 டிசம்பர் 2010 அன்று, குஜராத் பல்கலைக்கழகத்தின் சதுரங்க நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் 20,486 ஆட்டக்காரர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சதுரங்கம் விளையாடி, புதிய உலக சாதனையைப் படைத்தனர்.[15]
ஆனந்த், அரசியல் மற்றும் உளவியல் சூழ்ச்சிகளைத் தவிர்த்து, தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார் .[16] ஆனந்தின் வாழ்நாள் போட்டியாளர்காளான காஸ்பரொவ், கிராம்னிக் மற்றும் கார்ல்சன், 2010 உலக சதுரங்க வாகையாளர் போட்டியின் தயாரிப்பில் இவருக்கு உதவினர் என்பது அவரின் நற்பெயருக்கு சான்றாக இருக்கிறது.[16][17] ஆனந்த் 'மதராஸின் புலி' என்றும் அழைக்கப்படுகிறார்.[16]
ஆனந்தின் குடியுரிமை குறித்த குழப்பம் காரணமாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டது; இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, "ஆனந்த் தனக்கு நேரம் கிடைக்கும் போது பட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டதால் இந்த விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.[18] தி இந்துவின் கூற்றுப்படி, ஆனந்த் இறுதியாக டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.[16]
சதுரங்கமும் ஆனந்தும்
[தொகு]உலக சதுரங்க அரங்கிலும், குறிப்பாக இந்திய சதுரங்க அரங்கிலும் விஸ்வநாதன் ஆனந்த் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் தனது 14 வயதில் இந்திய கீழ் இளையோருக்கான(sub-junior) சதுரங்க சாம்பியன் போட்டியில் 9/9 புள்ளிகள்பெற்று வெற்றி வீரரானார். 15 வயதில் 1984இல் சர்வதேச மாஸ்டர்பட்டத்தினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரரானார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் மைந்தன் (lightning kid) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை சதுரங்க வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
2008
[தொகு]இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.[19]
உலக சதுரங்க வாகையாளர் 2010
[தொகு]பல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்கப் போட்டியின் வெற்றிவீரர்
பீடே உலக சதுரங்க வாகையாளர் 2000
[தொகு]வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.
உலக சதுரங்க வாகையாளர் 2007
[தொகு]ஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
உலக சதுரங்க வாகையாளர் 2010
[தொகு]ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோவை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.
உலக சதுரங்க வாகையாளர் 2012
[தொகு]உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை (Boris Gelfand) சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் [20].
உலக சதுரங்க வாகையாளர் 2013
[தொகு]இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார்.[21]
உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
[தொகு]அக்டோபர் 2003 இல் பிடே ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.
சதுரங்க பதக்கங்கள்
[தொகு]- 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
- 2000 சதுரங்க வெற்றிவீரர்
- 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்
- 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்
- 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
- 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
விருதுகள்
[தொகு]- அர்ஜுனா விருது - 1985
- தேசியக் குடிமகனுக்கான விருது, பத்மசிறீ விருது - (1987)
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)
- பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.
- பத்மபூஷண் (2000)
- சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008)
- பதும விபூசன் - 2007.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 100 முன்னணி ஆட்டக்காரர்கள் ஏப்ரல் 2007. அணுகப்பட்டது ஏப்ரல் 15 2007.
- ↑ ஜனவரி 9,2014 அன்று வெளிவந்த 'தி இந்து-2013 சுவடுகள்',பக்கம்-4
- ↑ "Vishy Anand: 'Chess is like acting'". ChessBase. October 2008. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
- ↑ "Viswanathan Anand: Who is he?". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
- ↑ "Sport : Anand inspires mind champions". 22 December 2007 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081029043133/http://www.hindu.com/2007/12/22/stories/2007122256681900.htm.
- ↑ Ninan, Susan (28 May 2015). "Super mom who shaped Anand's career no more". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 November 2018.
- ↑ "A Tamil entertainment ezine presenting interesting contents and useful services". Nilacharal. 11 December 1969. Archived from the original on 17 August 2003. பார்க்கப்பட்ட நாள் 31 May 2010.
- ↑ [1] பரணிடப்பட்டது 22 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 9.0 9.1 "Long Story Short with Leslie Wilcox: Viswanathan Anand". PBS Hawai‘i. 15 September 2014.
- ↑ "Don Bosco 'boys' reminisce about their good old days". 25 May 2007 இம் மூலத்தில் இருந்து 27 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070527141754/http://www.hindu.com/2007/05/25/stories/2007052502690200.htm.
- ↑ "Vishwanathan Anand: The King of 64 Squares". MSN. 12 August 2009. Archived from the original on 27 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Anand through the eyes of Aruna - From 1996 to 2020! - ChessBase India". www.chessbase.in. 2020-01-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
- ↑ "Aruna and Anand have a baby boy". ChessBase. 14 April 2011.
- ↑ 14.0 14.1 "Anand number one in the news". 4 April 2021.
- ↑ "Anand at Ahmedabad for Chess world record". IndiaVoice. 25 December 2010. Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 25 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 16.0 16.1 16.2 16.3 .
- ↑ "Chess News – Anand in Playchess – the helpers in Sofia". ChessBase. 19 May 2010. பார்க்கப்பட்ட நாள் 19 May 2010.
- ↑ "Citizenship row: Sibal apologises to Anand". Ibnlive.in.com. 3 February 2010. Archived from the original on 25 August 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்". பிபிசி. 30 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-25.
வெளியிணைப்புகள்
[தொகு]- Pages using infobox chess biography with unknown parameters
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- இந்திய சதுரங்க வீரர்கள்
- தமிழ் விளையாட்டு வீரர்கள்
- 1969 பிறப்புகள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்
- அருச்சுனா விருது பெற்ற தமிழர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள்
- நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்
- வாழும் நபர்கள்
- தமிழக சதுரங்க வீரர்கள்
- சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்
- சென்னை சதுரங்க வீரர்கள்
- உலக சதுரங்க வாகையாளர்கள்