வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை | |
---|---|
வெள்ளை மாளிகை தென் பகுதியின் முகப்பு. | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி. ஐக்கிய அமெரிக்க நாடு |
கட்டுமான ஆரம்பம் | அக்டோபர் 13, 1792 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜேம்ஸ் ஹோபன் |
வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W).
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை பரிணாமம்
[தொகு]1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.[1] எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.
References
[தொகு]- ↑ "வெள்ளை மாளிகை தீ விபத்து". White House Historical Association. Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-11-02.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)